Thursday, October 13, 2011

கீழக்கரை தேர்தல் !பாமரன் பார்வை...கட்டுரையாளர்:- நெய்னா

கட்டுரையாளர்:நெய்னா
“அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...”ஜனாப்.சாகுல் ஹமீது ஹாஜியார் காலத்திலிருந்து இன்றுவரை நான் கேட்ட…… என்னை வெற்றி பெறச்செய்தால்…….என்ற வாக்குறுதிகள், கோபத்திற்கு பதில் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
பஞ்சாயத்து போர்டாக இருந்த காலத்தில் ,,,,அப்பா தீவுவை சுற்றுலா மையமாக்குவோம்…..தீவுக்கு படகுபோக்குவரத்து ஏற்படுத்துவோம்.. கடற்கரையோரங்களில் பூங்காக்கள் அமைப்போம்….
நகராட்சியான இன்று ……குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவோம்…. தேங்கி நிற்கும் கழிவு நீரை தேங்காமல் ஓடச்செய்வோம்…என்று அடிப்படைப் பணிகளை பிரதானப் பணியாகவும்,செய்யப்போகும் சாதனைகளாகவும் கூறுவது, நமது ஊரின் நிலையை நன்கு உணர்த்தும்.
பஞ்சாயத்து போர்டாக இருந்தபோது குளித்து , விளையாடி பொழுதுபோக்கி மகிழ்ந்த கடற்கரையை..... யாரும் நெருங்க முடியாத அளவுக்கு சாக்கடை குட்டையாக்கி, குப்பை கிடங்காக்கியதுதான் நகராட்சி என தரம் உயர்ந்த நமது ஊரின் தரமும்,நமது தலைவர்களின் சாதனைகளும் ஆகும்.
யார் வந்தாலும் ஊருக்கு எதுவும் செய்யமாட்டார்கள் அவனவன் சம்பாதிக்கவே பார்ப்பான் என்ற மனநிலையில், ஊரின் நிலையை சரிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை மேலும் மோசமாக்கிவிடாத ஒருவர்க்கு் வோட்டுபோடுவோம்— என்ன செய்வது யாரையாவது தேர்ந்தெடுத்துதானே ஆகவேண்டும் என்ற விரக்தியுடன் பொதுமக்கள் இருக்கும்நிலையில்………….

10 பேர்கள் கலந்துகொள்ளும் போட்டியில் 3 பேர் மட்டுமே போட்டியில் முந்துகிறார்கள்.

1. தாஜுன் நிஷா(தி.மு.க)

மக்களின் எண்ணங்களை சற்று கூர்ந்து கவனித்தால் , இவர் பொதுவேட்பாளராக போட்டியிட்டு இருக்கவேண்டும் or சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருக்கிறது.சுய ஆளுமை, நிர்வாக அனுபவம், முதிர்ச்சி, குடும்பப் பின்னனி, பின்னிருந்து இயக்குபவர்கள் யார் யார், அரசியல் கட்சி சார்பு போன்ற காரணிகளை வைத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தி.மு.க. வேட்பாளர் கொஞ்சம் கூடுதல் தகுதிகளை கொண்டுள்ளார். இதுவே இவரது பலம் .ஆனால் திமுக நகராட்சி தலைவர் மீது கடும் அதிருப்தி நிலவுவதால் திமுக சார்பாக‌ இவர் வெற்றி பெற்றால் பழைய நிர்வாகம் போல் அமைந்து விடுமோ என்ற மக்களின் பயம் தான் இவருக்கு இருக்கும் ஒரே பின்னடைவு .மேலும் இவர் வெற்றி பெற்றால் திமுகவினர் தலையீடு இருக்கும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்


2.ராபியத்துல் காதரியா (அ.இ.அ.தி.மு.க.)

மக்கள் அறிமுகம் குறைவு.இவரது கணவர் ஒரளவு மக்களிடம் அறிமுகமானவர்.இவர் வெற்றி பெற்றால் இவர் கணவர் தலையீடு இருக்கும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆளும்கட்சி வந்தால் தான் திட்டங்களுக்கான நிதி தங்குதடையின்றி விரைந்து கிடைக்கும் என்ற ஆளும்கட்சி லாஜிக்கும் , ஆளும்கட்சி என்ற அதீத நம்பிக்கையும்தான் இவரது பலம் .


3. மெகர் பானு ( வேட்பாளர் – ம.ம.க ஆதரவு ) பல வித சர்ச்சைகளுக்கிடையில் அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழு என்ற கமிட்டியினால் அரசியல் கட்சி சார்பற்ற பொதுவேட்பாளர் என அறிவிக்கப்பட்டவர்.இதுவே அவரது பலமாக இருந்தது.ஆனால் தற்போது மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க) மற்றும் த.மு.மு.க ஆகியவற்றின் ஆதரவும் பெற்ற வேட்பாளர் என்று பகிங்கரமாக அறிவித்து வாக்குசேகரித்து வருவதும் ,நகர் த.மு.மு.க வினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் மக்களிடம் சந்தேகத்தையும் ,நம்பிக்கையின்மையையும் இவர் மேல் ஏற்படுத்திவிட்டது.
இவரை சார்ந்தவர்களின் முந்தைய கட்சி சார்பும், இன்றைய ம.ம.க மற்றும் த.மு.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர் என்ற இவர்களது விளம்பரங்களும் ,ம.ம.க தலைமையின் மெளனமும் , இவர் பொதுவேட்பாளர் இல்லை என்பதையும் கட்சிசார்ந்த வேட்பாளர்தான் என்பதை உறுதி செய்கிறது. இதை தெளிவுபடுத்துவது இவருக்கும் ,இவரை தேர்ந்தெடுத்த கமிட்டிக்கும் முதல் கடமையாகும்.
“இதுவரை தலைவராக வந்தவர்களில் பெரும்பாலனோர் சுயேட்சையாகவும், அரசியல் கட்சி சார்பாகவும் வென்றவர்கள் அதனால் அவர்களின் சுயநல செயல்பாடுகளையும், செயல்படாநிலைகளையும் தட்டிகேட்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இயலவில்லை.மேலும் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தனர். எனவே நாம் பொதுவேட்பாளர் என்று ஒருவரை தேர்வு செய்து வெற்றி பெறச்செய்தால் அவரை தட்டிகேட்கமுடியும்,அவரும் பொறுப்புடன் செயல்படுவார்” என்பதையே பொதுவேட்பாளர் அவசியம் என்பதற்கு காரணமாக கூறி வேட்பாளர் தேர்வு கமிட்டி அமைத்து , அரசியல்கட்சிகளின் மூலம் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை, கட்சிசார்பற்ற ்கட்சிஆதரவற்ற ஒருவரை பொதுவேட்பாளராக தேர்வு செய்து ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் மெகர் பானு் என்பவரை பொதுவேட்பாளராக தேர்வுசெய்து அனைத்து சமுதாய பொதுவேட்பாளர் தேர்தல் பணிக்குழு என்ற குழு அமைத்து பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு ஒர் வேண்டுகோள்(கேள்வி)கட்சி சார்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.க வேட்பாளர் தாஜுன் நிஷா அவர்களின் ஆதரவு கோரிய மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தீர்கள்.(தீர்மானத்தின் அடிப்படையில்) ஆனால்
கட்சி சார்பற்ற பொதுவேட்பாளர் என்று உங்களால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளர் ்மெகர்பானு அவர்கள் தற்போது மனித நேய மக்கள்கட்சி மற்றும் த.மு.மு.க -வி்ன் ஆதரவு பெற்ற வேட்பாளர் நான் என்று பகிங்கரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.உண்மைநிலை என்ன? பதில் கூறுமா அ.ச.பொ.தே.பணிக்குழு.

இதுபோன்ற செயல்கள் நல்லெண்ணத்துடன் ஊர் நன்மைக்காக முயற்சி செய்த அமைப்பினரையும் ,மக்களையும் ஏமாற்றும் முயற்சியாகும்.இதில் பாதி வெற்றி பெற்றிருந்தாலும் மீதி மக்கள் கையில்.நல்லவேளை தேர்தலுக்கு முன்பே இவரின் இரட்டைவேடம் வெளிப்பட்டுவிட்டது.

இதனை தெளிவு படுத்தாமல் மெளனம் சாதித்தால் , இது சுயநலக்கூட்டம் , தி.மு.க விரோதப்போக்கு, சமுதாய ஒற்றுமைக்கு எதிரான கூட்டம் என மற்றவர்கள் குற்றம் சாட்டியது உண்மைதானோ என்று பொதுவான மக்களும் நம்பத்தொடங்கிவிடுவார்கள்.
இது போன்ற பொது விஷயங்களில் ஈடுபடும் போது நாம் எதிர்பாராதது நிகழ்ந்து விட்டால் உடனே சரி செய்யப்படவேண்டும் அதற்கு எப்பொழுதும் தயாராகயிருக்க வேண்டும். இல்லையெனில் நமது முயற்சிகள் அனைத்தும் கேலிக்கூத்தாகிவிடும் மேலும் வருங்காலங்களில் எடுக்கப்படும் இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். அவ்வாறு ஏற்படாமல் மிகக் கவனமுடன் இருப்போமாக
மூவரில் பொதுவேட்பாளர் என்று யாரும் இல்லை.அனைவரும் கட்சி சார்புடன் தான் உள்ளனர். இந்த மூவரில் ஒருவரே முதல்வர், அவரே தலைவராக வேண்டும் என்ற நமது எண்ணமும் ,இறைவனின் விருப்பமும் ஒன்றாக அமையட்டும். ஆமீன்.

பொறுத்திருந்து பார்ப்போம்

” நிச்சயமாக அல்லஹ் அவன் நாடியவர்க்கே அதிகாரத்தையும் ,பதவியையும் வழங்குகிறான் ”

3 comments:

  1. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையும் மற்றும் ஊர் நிர்வாகிகளும் மிகவும் ஆவளாக கட்சி சார்பில் பேட்டியிடுவதற்கு வேட்பாளரை பரிசீலித்து வைத்திருந்தும் ஆனால் கீழக்கரையில் உள்ள ஜமாத் பெரியவர்கள்; மற்றும் மற்ற மத அமைப்பு பெரியவர்கள் ஒன்று கூடி ஊர் நலன் கருதி மட்டும் பணிசெய்யும் ஒரு சேர்மன் வேட்பாளரை தேர்தெடுத்த செய்தி அறிந்தவுடன் அந்த நல்ல நோக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் மனிதநேய மக்கள் கட்சி தலைமை கீழக்கரையில் தனி வேட்பாளர் நிறுத்தாமல் கீழக்கரை ஜமாத் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

    ReplyDelete
  2. அப்போ நங்க எப்போ சம்பாதிக்கிறது

    ReplyDelete
  3. அப்போ நங்க எப்போ சம்பாதிக்கிறது

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.