கீழக்கரையில் கடந்த 17ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கீழக்கரையில் ஓட்டு பதிவு செய்வதற்கான பூத் சிலிப்களை அரசு ஊழியர்கள் முறையாக விநியோகிக்காததால் ஏராளமான வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.மேலும் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பதாகத்தான் பூத் சிலிப் விநியோகம் நடைபெற்றதாம் இதனால் ஏராளமானோருக்கு பூத்சிலிப் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது குறித்து மக்கள் மக்கள் நல பாதுகாப்பு கழக் செயலாளர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, நான் 18வது வார்டை சேர்ந்தவன் எங்கள் வார்டில் மொத்தம் 1245 வாக்காளர்கள் உள்ளனர்.ஆனால் 662 வாக்குகள் மட்டுமே பதிவானது காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் ஏராளமானோருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை.இதனால் பெண்களில் பலர் பூத் சிலிப் வழங்காததால் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் சென்ற தேர்தலை விட இம்முறை 20 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. இந்த குளறுபடி எங்கள் வார்டில் மட்டுமல்ல அனைத்து அனைத்து வார்டுகளில் நடைபெற்றுள்ளது.இனி வருங்காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.