Monday, February 25, 2013

கீழக்கரை நகராட்சியில் தொடுதிரை கணினி அமைக்க கோரிக்கை!

thanks.image.pangovrnance.

கீழக்கரை நகராட்சியில் சொத்து வரி, தண்ணீர் வரி, நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்ட விபரங்கள் அறிவதற்கு மக்கள் நகராட்சியில் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த விபரங்களை விரைவாக அறிந்து கொள்வதற்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடுதிரை கணினியை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அமைப்பதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே நகராட்சி சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் பொதுமக்கள் சிரமமும், அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும். எனவே தொடுதிரை கணினி அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

 ‘ஏற்கனவே காரைக்குடி, சிவகங்கை போன்ற நகராட்சி அலுவலகங்களில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மக்கள் பலன் அடைந்த வருகின்றனர். நகராட்சி கணினியில் உள்ள தகவல்களை அப்படியே தொடுதிரை கணினிக்கு மாற்றம் செய்வது தற்போதய கணினி உலகத்தில் மிகவும் எளிதாகும். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அலுவலக வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும்’ என்றார்.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 25, 2013 at 1:27 PM

    கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தொடு திரை கணினி அமைக்கப்படுமானால் வரவேற்கத்தக்க ஒன்று.பொது மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய சீரிய சேவை.

    இப்போது ஏதாவது தகவலுக்கு அலுவலகம் சென்றால் சம்பந்தப்பட்டவர் இல்லை என்ற பதில் தான் அதிகமாக கிடைக்கிறது. இதனால் பொது மக்களுக்கு குறிப்பாக மூத்த குடிம்க்களுக்கு வீண் அலைச்சலும், போக்குவரத்தால் பண விரயமும் ஆவதுடன் மன உளைச்சலும் உண்டாகிறது.தொடு திரை கணினி வசதியால் மேற் குறிப்பிட்ட குறைகள் தீர பிரகாசமான வாயப்புண்டு.

    பொது பயனளிக்கும் இது விஷயத்திலாவது முதல் குடி மகளும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயல் பட இறைவனை பிரார்த்திப்போமாக

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.