Friday, February 24, 2012

கீழக்கரையில் முதல்வர் பிறந்தநாளையோட்டி 64 மரக்கன்றுகள் நடப்பட்டது ! !


கீழக்கரையில் முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாள் விழாவில் 64 மரக்கன்றுகள் நடும் விழா உள்பட 2000ம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது நகரின் முக்கிய இடங்களில் 5 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

பஜாரில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்ச்சியில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

மேலும் நலப்பணிகளில் ஒன்றாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஓஜேம் தெரு மஹ்தூமியா பள்ளி ,புதிய ஜெட்டி பாலம் உள்ளிட்ட 64 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் வனசரகர் ஜெயராமன்,வனக்காப்பாளர் பாலகிருஸ்ணன் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள்,அதிமுகவை சேர்ந்த நகரா ட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன், கவுன்சிலர்கள் செய்யது கருணை,அன்வர் அலி, இடிமின்னல் ஹாஜா,சாகுல் ஹமீது,முகைதீன் இப்ராகிம், நகர் இளைஞர் அணி செயலாளர் சரவண பாலாஜி,நகர் செயலாளர் ராஜேந்திரன் ,நகர் சிறுபாண்மை செயலாளர் மரக்கடை யாசீன்,அதிமுகவை சேர்ந்த வேல்சாமி,நாகரத்தினம்,ஹக்கீம்,ஜகுபர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

4 comments:

  1. சேர்மன் கோஷ்டியும் துணை சேர்மன் கோஷ்டியும் அடிச்சுகிட்டதை சொல்லக்காணோமே? சொன்னால் தானே மக்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 24, 2012 at 10:14 PM

    கீழக்கரையில் இன்று நடந்த முதல்வரின் பிறந்தநாள் விழாவில் நமது சேர்மனின் கணவர் கோஷ்டிக்கும் துனைசெர்மன் மற்றும் அவரின் கூட்டாளி நகர் செயலாளர் ராஜேந்திரன் கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்
    இவர்களுடைய கமிஷன் பஞ்சாயத்தை ரோட்டில் நடத்துவது சரியா
    இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது "சேர்மன்" மற்றும் "பொதுமக்கள்"
    ஹம் பாவம்

    ReplyDelete
  3. புதிய ஜெட்டி பாலத்தில் மரக்கன்று நட்டார்களா? அல்லது அதற்கு அருகில் நட்டார்களா? "அம்மா ஆட்சியில் நடுக்கடலில் மரக்கன்று நட்டார்கள்" என்று செய்தி வந்தால்கூட ஆச்சரியமில்லை.

    ReplyDelete
  4. மத்திய மாநில அரசுகளால் செய்யப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இப்படி சேர்மன் அல்லது துணை சேர்மன் போன்றோர் படங்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் கீழக்கரையில் நடைபெறும் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்களால்தான் மக்களுக்கு கிடைப்பதாக செய்தி பரப்பப்படுகிறது,
    போலியோ சொட்டு மருந்து போடும் படத்தை பார்த்து பலர் சேர்மனை பாராட்டுகின்றனர்.! மத்திய அரசால் அமைக்கப்பட்ட கடல் பாலத்தை நகராட்சி மூலம் கிடைக்கப்பட்டதாக இன்னும் மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.