Tuesday, February 14, 2012

போலி பெயரில் விஷமம்! காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்ப‌தாக‌ அறிவிப்பு !


இன்ஸ்பெக்டர் இளங்கோவன்


தொலைபேசியில் மிரட்டல்,செல்போனில் மிரட்டல் என்றெல்லாம் புகார்கள் கூறப்படும் தற்போது சமூக இணையதளங்களில் போலி முகவரிகளில் மிரட்டுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்தவர் முகம்மது சாலிஹ் என்ற கீழை இளையவன் சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தார் சில நாட்களுக்கு முன் அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது,

தற்சமயம் சமூக வலைதளத்தில், எந்தவித முகவரியும் இல்லாத சில விசமிகள், ஊர் நலனில் திடீர் அக்கறை கொண்டு உண்மைகள் சொல்ல முனைந்திருப்பதாக கூறிக் கொண்டு, என்னை பற்றி தவறான நச்சுக் கருத்துக்களை கூறிக் கொண்டு வலம் வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது போன்று முகவரி இல்லாமல் குறை கூறித்திரியும் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தாங்களும் முயற்சிக்க வேண்டுகிறேன். இது போன்ற செய்திகளை மறுபடியும், இவர்கள் வெளியிட்டால், 'சைபர் கிரைம்' போலீசாரிடம் முறைப்படி புகார் தெரிவித்து, அந்த மர்ம ஆசாமிகள் பயன்படுத்தும் அவர்களுடைய IP முகவரிகள், புதிய தொழில் நுட்பம் மூலம் கண்டு பிடிக்கப்படும் போது, அவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்ற மாதம் இதே போல் எழுந்த வேறு ஒரு குற்றச்சாட்டு குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
இது தொடர்பாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை மேலும் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கப்ப‌டும். இது தொட‌ர்பான‌ புகார்க‌ளை எங்க‌ளிட‌ம் அளிக்க‌லாம் அந்த புகார்கள் உரிய‌ முறையில் சைப‌ர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றவாறு அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

4 comments:

 1. Dear'கீழக்கரை டைம்ஸில்'news,

  1)இது எது உண்மை செய்தி(கீழக்கரை டைம்ஸில்)or(கீழை இளையவன்)?
  இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்தவர் முகம்மது சாலிஹ் என்ற கீழை இளையவன் சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தார் சில நாட்களுக்கு முன் அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

  pls one more old read

  Friday 10 February 2012
  வெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் புறக்கணிப்பு !
  2)இது எது உண்மை(comment)உள்ள செய்தி(கீழக்கரை டைம்ஸில்)or(கீழை இளையவன்)?

  கீழை இளையவன்Feb 10, 2012 06:39 AM
  நம்முடைய கீழக்கரை நகருக்கும், நகர மக்களுக்கும் எந்த விதத்திலும் பயனளிக்காத, 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் காக்கா அவர்களின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற அவசர கூட்டங்களை, நம் நகர் மக்களுக்கு நன்மை பயக்கும், பல நல்ல தீர்மானங்கள் எடுக்க இருக்கின்ற இந்த மன்ற கூட்டத்தை புறக்கணிக்கும் இவருடைய செயல் கடும் கண்டனத்துக்குரியது.
  வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு மாலை 4 மணிக்கு நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கின்றது என்று தெரியவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, பத்திரிகைக்கு செய்தி கொடுப்பதால்,யாருக்கு என்ன பயன்?நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பின்னர் எடுக்கப்பட்டு இருக்கும் தீர்மானங்களை பற்றி தேவையற்ற விமர்சனங்கள் செய்வதயாவது விட்டு விடுவது நல்லது.

  மேலும் நல்ல பல நோக்கங்களுக்காக, எந்தவித பிரதிபலனும் இன்றி பொது மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக கவுன்சிலர் ஆக்கினோம்.ஆனால் காக்கா அவர்கள், வார்டு பிரச்சனைகளை மறந்து, தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுடைய அவசியப் பாடுகளை நினைக்காமல், எல்லாவற்றிலும் குறை சொல்வதையும், மனு கொடுப்பதையும்,நோட்டீஸ் அடிப்பதையும் வழமையாக்கி கொண்டிருப்பதாலும்,கழகத்தின் யாருடைய சொல்லுக்கும் மதிப்பளிக்காத காரணத்தாலும் நான் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாலர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்றிலிருந்து விலகிக் கொளிகின்றேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த தருணத்திலும் என்னுடைய பெயரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, இனி எந்த ஒரு இடத்திலும், யாரும் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.
  எந்த தருணத்திலும் என்னுடைய பெயரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, இனி எந்த ஒரு இடத்திலும், யாரும் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.(old news)

  ReplyDelete
 2. Dear mr.முகம்மது சாலிஹ் brother,s,(avl)
  எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் செய்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  கீழை இளையவன் இணையதளம்.பலர் இதை ஆதரித்தார்கள் ஆனால்? இன்று?
  சிந்தித்து பாருங்கள் நண்பர்களே உண்மை புரியும்.

  Dear கீழக்கரை டைம் pls remove the news and image request for இளையவன்.

  thank keelakarai times

  with
  true.

  ReplyDelete
 3. சொந்தங்களை பிரிந்து, சோகங்களை சுமந்தவர்களாய், வருவாய் தேடி, வெளி நாட்டில் வசிக்கும் நம் கீழக்கரை நண்பர்களும், அன்பர்களும், நம் சொந்தங்களும், நமது சொந்த மண்ணின் செய்திகளை, தெரிந்து கொள்ள ஏதுவாக, எவ்வித பிரதிபலனும் பாராமல், நீங்கள் செய்யும் பணி மகத்தானது. தங்களின் செய்திகளை வாசிக்க ஆரம்பித்த கணங்களே, எனக்கு கீழை இளையவன் செய்திகள் ஆரம்பிக்கும் உயிரோட்டம் உருவானது என்பதை நான் மறுக்க முடியாது.

  தற்போது நம் நடு நிலைமை செய்திகளுக்கும், நம்முடைய இந்த களங்கமற்ற பணிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும், அல்லது முட்டுக்கட்டை போட நினைக்கும் 'வெட்டி மகான்களாகிய !' இந்த விஷக் கிருமிகளின் வேர் வெட்டும் வல்லமையை தாராயோ எனதிறைவா என, ஏக இறைவனை வேண்டியவனாக, அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்க, எங்கள் நண்பர்கள் குழு முடிவெடுத்து அதற்கான பணிகளில் முனைந்திருக்கிறோம்.

  'கீழக்கரை டயம்ஸ்' சார்பாக தங்களும், எங்களுக்கு முழு ஆதரவு தந்து எங்கள் பணிகள் மேலும் சிறக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  அன்புடன்
  கீழை இளையவன்

  ReplyDelete
 4. 18 ஆவது வார்டு வாக்காளர்கள்February 14, 2012 at 8:05 PM

  நண்பர் முகமது சாலிஹு அவர்கள்தான் இவரை கவுன்சிலராக்கினார் இப்பொழுது இவர் போக்கு சரியில்லை என்று கூறிக்கொண்டு பின்வாங்குவது இவர் பேச்சை கேட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறது
  இவர் போட்ட முடிச்சை இவர்தான் அவிழ்க்க வேண்டும் பாதியில் ஓடுவது சரியில்லை இது ஒன்னும் விளயாட்டில்லை

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.