Tuesday, February 14, 2012

கீழக்கரை ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனை!கழிவு நீர் தொட்டி அமைக்க ஜமாத் சார்பில் இடம் தரப்படுமா?
கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில் சாலைமுழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

சுகாதாரம் கேடு நிலவும் அவ்விடத்தை 2முறைக்கு மேல் நேரில் சென்று பார்வையிட்ட நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,
இதற்கு
நிரந்தர தீர்வு(கழிவு நீர் தொட்டி அமைக்க) காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது.இடத்தை பெறுவதற்காக தெற்குதெரு ஜமாத்தாரிடம் பேசி வருகிறோம்.விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம் என்று சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரை அப்பகுதியில் கழிவு நீர் சாலையில் ஆறு போல் ஒடிக்கொண்டிருக்கிறது.அவ்வப்போது தற்காலிக தீர்வாக உறிஞ்சு குழாய் மூலம் எடுக்கப்படுகிறது .


தெற்குதெரு ஜமாத் செயலாளர் பவுசுல் அலி ரஹ்மான்

தெற்கு தெரு ஜமாத் சார்பில் கழிவு நீர் தொட்டி அமைக்க இட‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டாத‌து ஏன் என்று தெற்குதெரு ஜமாத் செயலாளர் பவுசுல் அலி தரப்பில் கேட்ட போது ,

ஏற்கெனவே தெற்குதெரு ஜமாத்தால் தீர்மானம் போடப்பட்டு ஜமாத்துக்கு சொந்தமான‌ பகுதியில் வழங்கப்பட்ட‌ இடத்தில் க‌ழிவு நீர் தொட்டி உள்ளது. ஆனால் நகராட்சி அதை முறையாக‌ உப‌யோக‌ம் செய்யாமல் த‌ற்போது வேறு ப‌குதியில் இட‌ம் கேட்கிறார்கள்

.மேலும் சில நாட்களுக்கு முன் க‌ழிவுநீர் நீர் ஓடும் இட‌த்தை பார்வையிட்ட‌ ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முஜிபுர் ர‌ஹ்மான் "ஏற்கென‌வே இருக்கும் இட‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்த‌லாமே மேலும் புதிய‌தாக‌ இட‌த்தை பெற்று க‌ழிவு நீர் தொட்டி க‌ட்டுவ‌த‌ற்கு ந‌கராட்சியில் நிதி ஆதார‌ம் இல்லை' என்று அந்த‌ இட‌த்தில் தெரிவித்தாக அறிந்தோம்.

மேலும் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு தெற்குதெரு ஜமாத் சார்பில் மாவட்ட கலெக்டரிடமும்,கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடமும் வலியுறுத்தி உள்ளோம்.மேலும் கழிவு நீர் அகற்றுவது சம்பந்தமாக எம்.எம்.கே.காசிம் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதற்கான வழக்கும் நடைபெற்று வருகிறது.சூழ்நிலை இப்ப‌டி இருக்கும் போது தெற்கு தெரு ஜ‌மாத் இட‌ம் த‌ர‌வில்லை அத‌னால்தான் ஜாமியா நக‌ர் க‌ழிவுநீர் பிர‌ச்சனை தீரவில்லை என்று செய்தி ப‌ர‌ப்பப்ப‌டுகிற‌து. ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை தீர்க்க தெற்குதெரு ஜமாத் என்றென்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் தரப்பில் கூறப்பட்டது.

6 comments:

 1. தெற்கு தெருவான்February 14, 2012 at 2:12 AM

  இன்று இந்த கழிவு நீர் குளம் போல தேங்கிக் கிடப்பதற்கு முக்கிய காரணமே தெற்கு தெரு ஜமாஅத் தான். இன்று தெற்கு தெரு ஜமாத்தில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வரும் முக்கிய நிர்வாகிகள் ஜமாத்தின் ஆதரவில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மக்களால் தோற்கடிக்கப்பட்டவுடன், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழைய கழிவுநீர்த் தொட்டியை பயன்படுத்த முடியாமல் தடுத்தனர். உடனே தற்காலிகமாக அந்த பைப்பு லைன் உடைத்து விடப்பட்டு சாலையில் போக ஏற்பாடு செய்யப் பட்டது.அந்த கழிவு நீர் வெளியே ஓட முக்கிய காரணம் ஜமாஅத் தான். தற்போது இன்னும் சிறப்பாக செய்ய ஜமாத்தில் இடம் கேட்டால் ஏதேதோ காரணம் கூறி தட்டிக் கழிக்கின்றனர். தெற்கு தெரு மக்களின் அடிப்படை பிரச்சனை இது இதற்கு உதவாத ஜமாஅத் இடம் உங்களின் தனிப்பட்ட சுய ஆக்கிரமிப்புக்கு மட்டும் பயன்படுத்த படுகின்றதே யாரிடம் ஆதரவு கேட்டு அந்த இடங்களெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெற்கு தெரு பொதுமக்களின் பொது கருத்தெடுப்புக்கு தயாரா?. ஜமாஅத் நிர்வாகிகளே உங்களின் ஆட்டம் அடங்கும் நேரம் வந்துவிட்டது

  ReplyDelete
 2. திண்ணை தோழன்February 14, 2012 at 1:54 PM

  அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ..
  பழைய கழிவுநீர் தொட்டியை பயன்படுத்தவிடாமல் யாரும் தடுக்கவில்லை
  தற்காலிகமாக எந்த பைப்லைனையும் யாரும் இரக்கமில்லாமல் உடைக்கவும் இல்லை
  உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஜமாத்தை அடகுவைக்க வேண்டாம்
  மின்சாரம் இல்லாததால் மின்மோட்டார் ஓடாமல் உள்ளது அதற்க்கு பதில் ஏற்கனவே தீர்மானம் போட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள ஆயில் இன்ஜின் மோட்டாரை பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
  மேலும் தொட்டிகள் கட்ட ஏற்ப்பாடு செய்ய வேண்டும்
  அதை விடுத்து
  அனவிசயமாக பேசி திரிவது பகையைதான் ஏற்படுத்தும்
  சிருபுத்தியுடன் செயல்படுபவர்கள் புரிதுகொண்டாள் சரி /

  ReplyDelete
 3. தெற்கு தெருவான்February 14, 2012 at 2:44 PM

  சாக்கடையை அகற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கலான் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
  நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்ட பதிலில் கீழக்கரையில் அடிக்கடி மின் தடை ஏற்ப்படுவதால் கழிவு நீரை அகற்ற முடியவில்லை அதனால் டீசல் மோட்டார் மாட்டுவதற்கு நகராட்சி ஏற்ப்பாடு செய்துள்ளது, இரண்டு வாரத்திற்குள் டீசல் மோட்டார் மாட்டி கழிவு நீரை அகற்றிவிடுவோம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர். டீசல் மோட்டார் மாட்டினாலே நிலைமை சரியாகி விடும் என்று ஜமாஅத் தெரிவித்த கருத்து உண்மையாகி விட்டது.
  புதிய இடம் வேண்டும், அவர்கள் தடுக்கிறார்கள், இவர்கள் தடுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது.

  ReplyDelete
 4. வருத்தமில்லா வாலிபர் சங்கம்February 14, 2012 at 6:54 PM

  நமது சேர்மன் எப்போதும் சொன்னதை செய்யக்கூடியவர். ஆனால் இத்தனை நாட்களாக ஆயில் மோட்டார் வைப்பதற்கு 16வது வார்டு உறுப்பினரே தடையாக இருக்கிறார். காரணம் அவர் வீடு அருகில் மோட்டார் செட் இருப்பதால். அவர் வீடே தெற்கு தெரு ஜமாஅத் இடத்தில் தான் இருக்கிறது, ஜமாஅத் இடத்தில் இருந்து கொண்டே ஜமாத்திற்கு எதிராகவும், சுய லாபத்திற்காக மக்களின் பிரச்னை தீர தடையாக இருக்கும் அவர் மீது ஜமாஅத் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது..???

  ReplyDelete
 5. திண்ணை தோழன்February 14, 2012 at 7:44 PM

  முக்கிய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வவை நீதிமன்றம் மூலம் பெற்று தந்த ஜாமாத்தினருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 6. திண்ணை தோழன்February 14, 2012 at 7:49 PM

  ஆயில் மோட்டார் வைத்தால் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கூறும் சுயநலகாரர்களை காவல்துரைமூலம் ஒடுக்க வேண்டும்
  பணம் சம்பாதிக்க பதவிக்கு வந்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
  ஜமாஅத் இடத்தில் இருந்துகொண்டு ஜமாஅத்தின் அனைத்து நல உதவிகளையும் வெட்கமில்லாமல் பெற்றுக்கொண்டு / ஜமாத்தை எதிர்த்துக்கொண்டும் குறைகூரிகொண்டும் திரியும் இந்த ஈனப்பிரவிகளுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.