Wednesday, February 8, 2012
ராமநாதபுரம் அருகே 1,600 மெகாவாட் திறனில் புதிய அனல் மின்நிலையம்
ராமாநதபுரம் அருகே உப்பூர் சமீபத்தில் ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொ ண்ட அனல் மின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என வழுது�ர் இயற்கை எரிவாயு நிலைய மேற் பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரையில் உள்ள முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக தேசிய அளவிலான தொழில்நுட்ப கலந்துரையாடல் நடந்தது. கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவ ட்டம், வழுதூர் இயற்கை எரிவாயு மேற்பார் வை பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜா காந்தி, மும்பை கிரா ம்டன் கிரிவ்ஸ் மேலாளர் ஜெயபாலன், கல்லு�ரி இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 25 கல்லூரிகளும், தமிழகத்தில் 40 கல்லூரிகளும் பங்களித்து 65 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
வழுதூர் இயற்கை எரி வாயு நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் பேசுகையில், “ உப்பூரில் ஆயிரத்து 200 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு நடைபெறுகிறது. சுமார் ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் இந்த அன ல்மின் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் எரிவாயு அதிகமாக கிடைத்த போதிலும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால், 3வது யூனிட் துவங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
இதன் மூலம் ராமாநாதபுரம் மாவட்டத்திற்கான மின்சார தேவை ஓரளவு பூர்த்தியாகும் என கூறப்படுகிறது.
இது குறித்து மின்சார துறை சம்பந்தபட்டவரிடம் கேட்ட போது,
மின்சார தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளொன்றுக்கு 100 மெகவாட் தேவை ஆனால் தற்போது வழங்கப்படுது 40 மெகாவாட்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளொன்றுக்கு 400 மெகவாட்க்கும் குறையாத அளவில் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் உற்பத்தி செய்யும் மாவட்டத்துக்கோ அல்லது மாநிலத்துக்கோ கொடுக்கப்பவதில்லை பல இடங்களுக்கும்(வேறு மாவட்டம்,வேறு மாநிலம்) மின்சார பகிர்ந்து கொடுக்கப்படும்.அதனால் தான் ஓரளவுக்கு தீரும் என்று சொல்லப்படுகிறது.மேலும் இந்த புதிய அனல் தொடங்கி செய்லபட சுமார் 4 வருட காலம் ஆகும் இவ்வாறு தெரிவித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.