Monday, February 13, 2012

"இருட்டு ஆட்சியை கண்டிக்கிறோம்"கீழ‌க்க‌ரையில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்ப‌ட்ட‌த்தில் கோஷ‌ம் !






கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ந‌டைபெற்ற‌து.


தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நாளொன்றுக்கு காலையில்,இரவிலுமாக 10மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடர் மின் வெட்டால் ரைஸ் மில்,லேத் பட்டரை ,உள்ளிட்ட பல் வேறு சிறு தொழில்களும் முடங்கியுள்ளது.இதை கண்டித்து 35க்கு மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற‌து.

"இருட்டு ஆட்சியை க‌ண்டிக்கிறோம் " என்று கோஷ‌ம் எழுப்ப‌ப்ப‌ட்டு ஆர்பாட்ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.மின் த‌டை க‌ண்டித்து ப‌ல‌ரும் பேசின‌ர்.
இதில் திமுக‌,காங்கிர‌ஸ் ,எஸ்டிபிஐ,த‌முமுக‌,இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் உள்ப‌ட‌ அதிமுக‌ த‌விர‌ அனைத்து க‌ட்சியின‌ரும், இயக்கங்கள் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் பொதும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு கீழ‌க்க‌ரையில் ந‌டைபெறும் ஆர்ப்பாட்ட‌த்தில் திர‌ளாக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌ அப்ப‌குதியில் உள்ளோர் கூறின‌ர்.

5 comments:

  1. இளம்புயல் இத்ரிஸ்February 13, 2012 at 3:38 PM

    இன்று நடந்த ஆர்ப்பாட்டம் கீழக்கரை மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டியதோ என்னவோ கீழக்கரை மக்களின் ஒற்றுமை இன்மையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது.மொத்தம் 37 அமைப்புக்கள் 6 நகரமன்ற உறப்பினர்களின் ஆதரவோடு SDPI யின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வடிவேலு பாணியில் சொல்றதா இருந்தா ஆகா மொத்தமா ஊரு ஒன்னு கூடிட்டாங்கய்யா கொல்ல பயலுக வருவாங்கன்னு நெனச்சி போனா வெறும் 3௦௦ பேரு மட்டும் தான் போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க...மொத்தம் 37 அமைப்பு ஒரு அமைப்புக்கு 1௦ பேருன்னு வந்தாலும் ஒரு 5௦௦ பேராவது இந்த கூட்டத்திற்கு வந்திருக்க முடியுமே...SDPI மட்டும் ஒரு 75 பேரு இருப்பாங்க...மத்த அமைப்பை செர்ந்தவுங்கல்லாம் எங்கப்பா? இந்த கூட்டத்தில தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக காங்கிரஸ் தமுமுக இப்புடி இவங்க தனிப்பட்ட கூட்டத்திற்கே நிறைய மக்களை கூட்ட முடியுமே? ஊரின் ஒரு முக்கியமான பிரச்னைக்கு இவர்கள் ஏன் ஒன்று கூடவில்லை? சரி கூட்டந்தான் கொஞ்சம்னு பாத்தா ஒரு அமைப்பு கூடங்குளம் வேணும்னு சொல்லுது இன்னொரு அமைப்பு வேணாம்னு சொல்லுது நிச்சயமாக மக்கள் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள்...
    ஆமா இந்த எட்டு ஜமாத் எட்டு ஜமாத்துன்னு சொல்லிக்கிட்டு திரிவாங்களே அவுங்க எங்க போய்ட்டாங்க?

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 13, 2012 at 4:27 PM

    போட்டோவை பார்க்கும் பொழுது இது அனைத்து கட்சி இயக்கங்களின் ஆர்ப்பாட்டம் போல் தெரியவில்லையே
    இது sdpi என்னும் ஒரு கட்சியின் கூட்டம் போல் தான் தெரிகிறது

    ReplyDelete
  3. Dear Keelakarai,

    கீழ‌க்க‌ரையில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்ப‌ட்ட‌த்தில்.....
    Their organization,திரு.பி.சித்திக் அலி-ward No:12
    திரு.முகைதீன் இப்ராஹீம்-ward No:18
    The two independant will never improve in the keelakarai.
    " Makkal Nalla Padugapu Khaligam" Their organization," Makkal Nalla Padugapu Khaligam" அமைப்பு க‌ல‌ந்து கொண்டத‌து.
    பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

    thank u
    A Keelakarai well wisher

    ReplyDelete
  4. Dear A Keelakarai well wisher,

    right comment

    ReplyDelete
  5. முன்னாள் MNPFebruary 14, 2012 at 7:57 PM

    இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக தங்கள் சுய விளம்பரத்திற்காகவும் தங்களின் கட்சியின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே
    மின்சார வெட்டுக்கு இந்த ஆர்பாட்டம் நிச்சயமாக எந்த ஒரு பயனும் தராது என்று இவர்கள் நன்கு அறிவர் பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்
    என் மக்களே இவர்களை புரிந்து கொள்ளுங்கள்
    எச்சரிக்கை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.