Monday, February 6, 2012
வாகனம் செல்ல முடியாத அளவில் வள்ளல் சீதக்காதி சாலை ! கமிஷனரிடம் தமுமுக மனு
பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மானிடம் கீழக்கரை நகர் தமுமுக பொருளாளர் "ஈஸி ஜெராக்ஸ்"சாதிக் மனு கொடுத்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது..
கீழக்கரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.சென்னை முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் பேருந்துகள் கீழக்கரை வழியாகவும்,நகருக்குள்ளும் வந்து செல்கின்றனர்.
கீழக்கரைக்கு வரும் பெரும்பாலான பேருந்துகள் குறிப்பாக கன்னியாக்குமரி,திருச்செந்தூர்,திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் கீழக்கரை பேருந்து நிலையம் வந்து செல்வதில்லை .ஏர்வாடி முக்கு ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை நகருக்குள் பஸ்கள் வராததால் பெண்கள்,வயதான பெரியவர்கள்,மாற்று திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கறோம்.
பழைய(பைல்) படம்
மேலும் கீழக்கரை ஏர்வாடி விலக்கு சாலையிலிருந்து கீழக்கரை கடற்கரை சாலை வரை செல்லும் சாலையான வள்ளல் சீதக்காதி சாலை பல இடங்களில் குண்டும்,குழியுமாக மேடு பள்ளம் நிறைந்து போக்கு வரத்திற்கு ஏற்றதாக இல்லை. வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கீழக்கரை நகராட்சி பகுதியில் வள்ளல் சீதக்காதி சாலை,தபால் தந்தி அலுவலகம் செல்லும் சாலை,பேட்டை தெரு,தெற்கு தெரு ஆகிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு பக்கமும் ,இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வாகனங்கல் செல்லாத அளவிற்கும்,மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.எனவே முக்கிய சாலைகளை "நோ பார்க்கிங்" பகுதியாக அறிவித்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் அவர்களை கேட்டு கொள்கிறோம்.
பொது சுகாதாரம் கருதி "பிளாஸ்டிக்" உபயோகிக்க தடை செய்து தீர்மாணம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இது குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்கள் மூலம் ஊர்வலம் நடத்தி விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற எங்கள் அமைப்பின் மூலம் பக்கபலமாகவும்,உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு கொடுபோம் இவ்வாறு மனுவில் கூறியிள்ளார்.
,
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முயற்சி
ReplyDeleteஉங்கள் பற்றை உங்கள் இயக்கத்திற்கு காட்டுவதைவிட நீங்கள் பிறந்த ஊருக்கு காட்டுவதே சிறந்தது
அலுவல் நேரத்தில் நகராட்சி அலுவலகம் அருகே சரக்குகள் இறக்க நிறுத்தப்படும் லாரிகளை அப்புரபடுத்தினால் இந்த ஊருக்கு செய்யும் மேகப்பெரிய நன்மையான காரியம்
ReplyDelete