Saturday, February 25, 2012

இளைஞர் தாக்குதல் சம்பவம் ! கண்டித்து ராமநாதபுரம் காவல்துறை அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள் !


காயமடைந்த அலீம்
படம்: சாலிஹ் ஹுசைன்

கீழக்கரையை சேர்ந்தவர் கிதிர் நய்னா முகம்மது என்பவரின் மகன் அலீம்(27) நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி கார்த்திக் உள்பட 10க்கும் மேற்பட்ட‌ நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் செய்தி கேள்விபட்டு கீழக்கரையை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் திரண்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துணை சூப்பிரண்டு முரளிதரன், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஸ்ணன் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது,துணை தலைவர் அப்பாஸ் அலி,தமுமுக நகர் துணை தலைவர் அபுதாகிர் உள்பட நூற்றுக்கணக்கனோர் திரண்டனர்.இரவு நேரங்களில் கீழக்கரைக்கு வருபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது இதை தடுக்க வேண்டும்.இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறுகையில் ,
மக்களை அச்சுறுத்தும் இது போன்ற சட்ட விரோத தாக்குதல் கண்டிக்கதக்கது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நாளை சந்திக்க உள்ளோம் கடும் நடவைக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன் என்றார்.

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில் ,
தொடர்ந்து இது போல் நடப்பது வாடிக்கையாகி விட்டது இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு இரவு நேரத்தில் செல்லும் பேரூந்துகளில் பயணம் செய்யும் பள்ளவச்சேரி, திருப்புல்லானி மற்றும் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்களை R.Sமடை என்ற ஊரை சேர்ந்த சிலர் கூட்டாக தாக்கி காயப்படுத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சேகு சதக் இப்ராகிம் கூறுகையில் ,

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் இரவில் கழுங்கு,RSமடை பகுதி அருகில் அடிகடி வழிப்பறி நடைபெறுகிறது. விரைவு பேருந்து,லோக்கல் பேருந்துகளில் செல்லும்பொதுமக்களை அடிக்கடிதேவையில்லாமல் வன்முறைத்தாக்குதல் நடத்துவது இதனால் அரசு மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்களை அச்சிருத்தியும் படியும் சம்பவம்தொடர்ந்து நடைபெற்று வருகிறது ,உடனடியாக இதற்கு காவல்துறை தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் .அந்த பகுதிகளில் திரும்பவும் போலீஸ் செக் போஸ்ட் அமைக்க வேண்டும்.

இத்தாக்குதல் கீழக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 comments:

  1. செய்திகள் வந்துக்கிட்டுதன் இருக்கு ஆனால் முடிவு ஒன்னும் இது வரைக்கும் கிடைக்க வில்லை இதற்கு முடிவுதான் என்ன ?

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 26, 2012 at 2:35 PM

    இது ஒன்றும் புதிதல்ல நாம் பொறுமை காக்க
    அடிக்கு அடி
    அது தான் இஸ்லாம்
    ஒருமுறை பொறுப்பது இஸ்லாம் என்றால்
    இப்படி காலம் முழுக்க பொறுப்பது யார் வழி
    ஒரு பூனை கூட அடிக்க போனால் திரும்ப சீரும்
    ஆனால் இந்த கீழக்கரை காரன் ரொம்ப நல்லவன் என்று பெயர் வாங்கியது போதும்

    ReplyDelete
  3. கரையில் இருந்துFebruary 26, 2012 at 5:02 PM

    தரமான கருத்து .......தங்கள் சொல்லுவது போல் செயலில் காட்டினால் நன்றாக இருக்கும் ...தங்களோ வெளிநாட்டில் இருகிறிர்கள் ....ஏப்படி சாத்தியபடும் நண்பரே ???

    முதலில் தங்கள் வந்து சொந்த ஊரில் வேலை செய்யுங்கள் அப்பறம் பார்போம் உங்களுடைய வீரத்தை !!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.