Sunday, February 12, 2012
நாளை(13-02-12) கீழக்கரையில் 36 அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம்!
நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது
நாளை(13-02-12)கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 மணியளவில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நாளொன்றுக்கு காலையில்,இரவிலுமாக 10மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.
இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடர் மின் வெட்டால் ரைஸ் மில்,லேத் பட்டரை ,உள்ளிட்ட பல் வேறு சிறு தொழில்களும் முடங்கியுள்ளது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தா விட்டால் அவர்களின் மின் இணைப்பை துண்டிப்பதில் காட்டும் அக்கறையை அரசாங்கமானது பொதுமக்களுக்கு மின்சாரம் சீராக விநியோகம் செய்வதிலும் காட்ட வேண்டும்.
இந்த மின் வெட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலின் எதிரொலியாக கீழக்கரையில் 35க்கு மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து நாளை(13-02-12)புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 மணியளவில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழக்கரையில் உள்ள அனைவரும் கலந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம்அரசாங்கத்தின் செவிகளில் கீழக்கரை மக்களின் கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.
ஆர்ப்பட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
கீழக்கரையில் 36 அமைப்புகள் இருக்கிறதா.!! நான் ஏதோ 8 ஜமாஅத், 21 கவுன்சிலர்கள் மற்றும் வருத்தமில்லா வாலிபர் சங்கம்
ReplyDeleteமட்டும் இருப்பதாக நினைத்தேன்.
இன்னும் எத்தனை அமைப்புகள், சங்கங்கள் கீழக்கரையில் இருக்கிறது.?
உங்களது குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.
ReplyDelete