Thursday, February 2, 2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்தால் ரூ500 அபராதம் !


முஜிபு ரஹமான்- நகராட்சி கமிஷனர்(பொறுப்பு)

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் 40 மைக்ரோனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் சுமார் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனறனர். சுற்றுப்புற சூழலை பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் அதிகளவில் பயன்படுத்தபட்டு மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் கப்களுக்கு தடை விதிக்கப்பட்டு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹமான் கூறுகையில் ,
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் முடிவின்படி இப்ப‌பகுதிகளில் 40 மைக்ரோனுக்கு குறைந்த பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் விற்பனை செய்யக்கூடாது.

எங்கள் அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் பொருள்களை பறிமுதல் செய்வதோடு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

3 comments:

  1. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஊட்டி கொடைக்கானல் பகுதியில் பயன்படுத்தப்படும் விலை மலிவான துணி பைகளை எங்கு எப்படி பெருவது பற்றி மக்களிடையேயும் வணிகர்களிடேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    ReplyDelete
  2. கீழக்கரையில் தற்போது புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது அங்கே நோன்புக்கஞ்சி ஸ்டாலில் இன்னும் பிளாஸ்டிக் பைகளில் தான் பொருட்களை போட்டுக் கொடுத்தனர். பெரும்பாலான கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பை விநியோகம் நடைபெறுகின்றது.சில இடங்களில் முத்திரை இடப்பட்ட 40 மைக்ரான்களுக்கு அதிக தடிமன் உள்ள பைகள் விலைக்கு வழங்கப்படுகின்றன.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.