Tuesday, February 28, 2012

கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !ராமநாதபுரம் காவ‌ல்துறையினரின் மெத்த‌ன‌ போக்கு !கீழக்கரையை சேர்ந்தவர் கிதிர் நய்னா முகம்மது என்பவரின் மகன் அலீம்(27) நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி கார்த்திக் உள்பட 10க்கும் மேற்பட்ட‌ நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்று ப‌ல‌ நாள‌கியும் இது வ‌ரை ராமநாதபுரம் காவ‌ல்துறையினர் முழு அள‌விலான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காம‌ல் கால‌ம் தாழ்த்தி வ‌ருவ‌தாக‌ பொதும‌க்க‌ள் த‌ர‌ப்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து
இந்நிலையில் கீழக்கரையின் பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரிடம் நூற்றுக்கணக்கானோர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட கலெக்டரிடமும் நேற்று ஏராளமானோர் சென்று மனு கொடுத்துள்ளனர்.கீழக்கரை நகரின் பல்வேறு இடங்களில் சுவ‌ரொட்டி ஒட்டப்பட்டுள்ளளது. ஆனால் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து ஏனோ தானேவென்று செயல்படுவதாக என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து செய்யது இப்ராகிம் கூறுகையில் ,
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை வருபவர்கள் மீது இப்பகுதில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரியவில்லை பிரச்சனையின் முக்கியத்துவத்தை கருதி மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை உடனடி எடுக்க வேண்டும்.

கீழ‌க்கரையை சேர்ந்த‌ ஹுசைன் கூறிய‌தாவ‌து, முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அனைத்து த‌ர‌ப்பின‌ரும் இணைந்து இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாக‌ உறுதி அளித்துள்ள‌ன‌ர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக‌ ஒருவ‌ரை கைது செய்துள்ள‌தாக‌ செய்திக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.இனி மேல் இது போல் ஒரு ச‌ம்ப‌வ‌ம் நடைபெற‌ அனும‌திக்க‌ கூடாது என்றார்.


சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது,ராமநாதபுரம் காவல்துறையினர் இது வரை நடவடிக்கை எடுக்காதது அவர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இதனால் கீழக்கரை மக்கள் ரோட்டில் இறங்கி போராடக்கூடிய சூழ்நிலையை காவல்துறையினர் உருவாக்குகிறார்கள்.உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ராமநாதபுரம் பி 1 போலீசார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ள‌ன‌ர். ஒருவ‌ரை கைது செய்து விசாரித்து வ‌ருவதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.மேலும் ஆர்.எஸ் ம‌டையை சேர்ந்த‌ சில‌ர் ச‌மாதான‌ பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை ச‌ந்தித்து பேசி வ‌ருவ‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகியுள்ள‌து.

1 comment:

 1. கரையில் இருந்துFebruary 28, 2012 at 2:56 PM

  முயற்சிகள் செய்த அணைத்து மக்களுக்கும் இறைவன் நற்குளி வழங்குவன் !!!
  இது போல கடந்த காலத்தில் நாம் ஊரில் நடைபெற்ற சம்பவத்தில் காவல் துறை குறிபிட்ட நபரை (அவர் அப்பாவி எனபது வேறு விசயம் ) கைது செய்து அவர் சார்ந்த முஸ்லிம் சமுதாய பெண்களை
  இழிவு படுத்தி பேசியது மட்டும் அல்லாமல் அவரை கடுமையாக தாக்கி சுயநினைவை இழக்க செய்தது இந்த காவல் துறை !!!

  ஆனால் இப்போது ?????

  இந்த சமுதாயம் மற்றும் தலித் சமுதாயம் என்றால் அவர்களுக்கு சுடும் ......

  அந்த ஊர் மக்கள் பத்திரத்தில் கையெழுத்து போட்டு தரவேண்டும் இனிமேல் இதுமாதுரி எந்த உயர் மக்களையும் அடிகமாடோம்,தவறும் பச்சத்தில் எங்களை பதிக்க படநபர் வந்து தாக்கலாம் அல்லது சட்டத்தின் படி முடிவு கொடுக்கலாம் .

  குறிப்பு : மிண்டும் இது போல் நடந்தாள் அடி கொடுக்க படும் அணைத்து ஊர் மக்கள் சார்பாக .....

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.