Wednesday, February 29, 2012

கீழக்கரையில் ரூபாய் செலுத்தி நாண‌ய‌ம் பெறுவ‌த‌ற்கு தானிய‌ங்கி இய‌ந்திர‌ம்!




கீழக்கரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தானியங்கி சில்லரை நாணய இயந்திரம் நிறுவப்பட்டது.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா துவக்கி வைத்தார்.13,17,14 ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர்கள், இந்திய‌ன் வ‌ங்கி நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ பல‌ர் இந்நிக‌ழ்ச்சியில் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

இந்த இயந்திரத்தின் மூலம் 10 ரூபாய்க்கான சில்லரை நாணயங்களை பெற முடியும். இதற்கென பத்து ரூபாய் நோட்டை இயந்திரத்தினுள் செலுத்த வேண்டும். இயந்திரத்தினுள் செலுத்தப்பட்ட 10 ரூபாய் நோட்டு ஸ்கேன் செய்யப்பட்டு, பின்னர் சில்லரை நாணயம் வெளியே வரும். பொதுமக்களுக்கு ஏற்படும் சில்லரை நாணய தட்டுப்பாட்டை போக்க இது உதவும்.
5, 2, 1 ரூபாய் நாணயங்கள் இந்த தானியங்கி சில்லரை நாணயம் வழங்கும் இயந்திரத்தில் இருந்து கிடைக்கும். இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும்.இவ்வாறு நிர்வாக‌த்தின‌ர் த‌க‌வ‌ல் தெரிவித்த‌ன‌ர்

1 comment:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்March 1, 2012 at 12:02 AM

    பாரட்டுக்குரிய உலகளாவிய சாதனைதான்.

    இந்த வங்கியில் கீழக்கரை மற்றூம் சுற்று வட்டாரத்தை சார்ந்த் பல ஆயிரக்கண்க்காண ஆண்கள், பெண்கள் ( கோஷா பெண்கள் உட்பட) வங்கி கணக்கு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதுவாக இன்றைய காலத்தின் கட்டாயமான ஏ.டி.எம். இயந்திரம் நகரில் இல்லை.ஆனால் சில்லரை நாணயம் தானியங்கி இயந்த்ரம் வைக்கிறார்களாம். வேடிக்கைதான் போங்கள்.

    மக்களுக்கு சேவை செய்ய இது போல் முனைப்பு காட்டுவதில்லை. இவர்கள் வழ்ங்கும் ஏ.டி.எம், அட்டையை மற்ற வ்ங்கி இயந்திரத்தில் தான் ஊரில் பயன்படுத்த முடியும்.அதுவும் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்த்னால் நம்முடைய கணக்கில் சேவை கட்டணமாக ஒரு தொகை பிடிக்கப்படும். மேலும் மினி ஸ்டேட்மெண்டும் கிடைக்காது.

    நகரில் வங்கியே இல்லாத ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். இயந்திரம் வைத்துள்ளது.ஆனால் ஏறத்தாழ நாற்பது வருட்ங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட ஐ.ஒ.பி. வங்கிக்கு இந்த சேவையை மக்களுக்கு கொடுக்க திராணி இல்லை.

    தலைமை ஏற்று திறப்பு விழா கண்ட நமது நகரின் முதல் குடிமகள் தன் பரிவாரகளுட்ன் சென்று இதற்கு விடை காணுவாரா? கட்டாயம் விடை காண வேண்டும். வெற்றி உனதாகி புகழ் சேரட்டும். விரார்த்த்னையுடன் வாழ்த்த்க்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.