Friday, February 10, 2012

வெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் புறக்கணிப்பு !



இன்று கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறுகிறது.



இந்நிலையில் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ருக்கு அனுப்பியுள்ள‌ ம‌னுவில் கூறியிருப்ப‌தாவ‌து ,


கடந்த நகர் மன்ற கூட்டங்களில் வெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த வேண்டாம் என்று பல நகர்மன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இதை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த போது பலர் இதை ஆதரித்தார்கள். கடந்த நகர்மன்ற சாதரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்திய போதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தற்போது நடைபெறும் அவசர கூட்டமும் உரிய கால அவகாசம் இருந்தும் நகர்மன்ற உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் வெள்ளிக்கிழமை நடத்தப்படுவதால் இக்கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்கின்றேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவ‌ர் குறிப்பிடுள்ளார்

17 comments:

  1. நம்முடைய கீழக்கரை நகருக்கும், நகர மக்களுக்கும் எந்த விதத்திலும் பயனளிக்காத, 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் காக்கா அவர்களின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற அவசர கூட்டங்களை, நம் நகர் மக்களுக்கு நன்மை பயக்கும், பல நல்ல தீர்மானங்கள் எடுக்க இருக்கின்ற இந்த மன்ற கூட்டத்தை புறக்கணிக்கும் இவருடைய செயல் கடும் கண்டனத்துக்குரியது.

    வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு மாலை 4 மணிக்கு நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கின்றது என்று தெரியவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, பத்திரிகைக்கு செய்தி கொடுப்பதால், யாருக்கு என்ன பயன் ? நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பின்னர் எடுக்கப்பட்டு இருக்கும் தீர்மானங்களை பற்றி தேவையற்ற விமர்சனங்கள் செய்வதயாவது விட்டு விடுவது நல்லது.

    மேலும் நல்ல பல நோக்கங்களுக்காக, எந்தவித பிரதிபலனும் இன்றி பொது மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக கவுன்சிலர் ஆக்கினோம். ஆனால் காக்கா அவர்கள், வார்டு பிரச்சனைகளை மறந்து, தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுடைய அவசியப் பாடுகளை நினைக்காமல், எல்லாவற்றிலும் குறை சொல்வதையும், மனு கொடுப்பதையும், நோட்டீஸ் அடிப்பதையும் வழமையாக்கி கொண்டிருப்பதாலும், கழகத்தின் யாருடைய சொல்லுக்கும் மதிப்பளிக்காத காரணத்தாலும் நான் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாலர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்றிலிருந்து விலகிக் கொளிகின்றேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எந்த தருணத்திலும் என்னுடைய பெயரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, இனி எந்த ஒரு இடத்திலும், யாரும் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். தயவு கூர்ந்து இனி இது போன்ற தேவையற்ற, யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத செய்திகளை, 'கீழக்கரை டைம்ஸில்' வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
    Replies
    1. முன்னால் உறுப்பினர்February 11, 2012 at 10:29 AM

      அண்ணன் சரியான முடிவு.

      Delete
    2. மக்கள் நலன் விரும்பிFebruary 11, 2012 at 11:00 AM

      சமீபத்தில் கீழக்கரைக்கு வருகை தந்த மலேசிய அமைச்சரின் வரவேற்பு நிகழ்ச்சியில் நெறிமுறையை மீறி கீழக்கரை நகராட்சி தலைவர் செயல்பட்டதாக 18 வது உறுப்பினர் முகைதீன் இபுராஹீம் குற்றம் சாட்டி இருந்தார், இது பற்றி நமது பேட்டியில் நகராட்சி தலைவரிடம் கேட்டபோது அதற்கான மறுப்பை தெரிவித்தும், உறுப்பினரின் குற்றச்சாட்டு பற்றி சில கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார், அதனை நம் இனைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம், இது சமபந்தமாக நம்மை அழைத்து விளக்கம் தர உறுப்பினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, (((((நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் இருந்த உறுப்பினர் முகைதீன் இபுராஹீமின அலுவலகத்தில்)))) அவரை சந்தித்து உரையாடினோம்.

      Delete
    3. மக்கள் நலன் விரும்பிFebruary 11, 2012 at 11:01 AM

      மக்கள் நல பாதுகாப்புக் கழக அலுவலத்தை உறுப்பினர் முகைதீன் இபுராஹீம் தனது வார்டு அலுவலமாக மாற்றியது எப்போது.

      Delete
  2. இதை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த போது பலர் இதை ஆதரித்தார்கள். கடந்த நகர்மன்ற சாதரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்திய போதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    4 pm whats your problem ??? if attend நகர்மன்ற கூட்டம் .missing sleep??

    ReplyDelete
  3. We agree with the member's feeling. No business will be made during Jum'a prayer. After prayer the meeting can be proceeded.

    ReplyDelete
  4. மக்கள் நலன் விரும்பிFebruary 11, 2012 at 10:51 AM

    மக்கள் நலனில் அக்கரை காட்டமல் தனது சுய விளம்பரத்திற்காக செயல்படும் இந்த முஹைதீன் இப்ராகிம் அவர்கள் இது போன்று தேவையற்ற செயல்களை நிறுத்திவிட்டு அவர்களது வார்டு மக்களுக்காக செயல்பட்டால் நல்லது..

    கீழை இளையவன் அவர்கள் வெளியிட்ட கருத்துகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

    தயவு கூர்ந்து இனி இது போன்ற தேவையற்ற, யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத செய்திகளை, 'கீழக்கரை டைம்ஸில்' வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்யது ரியாஸ்February 15, 2012 at 12:08 AM

      மக்கள் நலன் விரும்பி அவர்களே முகைதீன் இபுறாகிம் அவர்கள் பேட்டியே முழுமையாக படிக்காமல் போட்டாவை பார்த்தவுடன் குறை கூறுகிறீர்களே அவருடைய வார்டில் என்ன குறை கண்டீர்கள்.

      Delete
    2. மக்கள் நல விரும்பிFebruary 15, 2012 at 11:30 AM

      செய்யது ரியாஸ் அவர்களே

      அவரது போட்டோவை பார்த்தவுடன் குறை கூற அவருடைய போட்டோ என்ன அசிங்கமாகவா உள்ளது?.. நான் கூறியதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். உங்களது வார்டில் குறை இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி. மற்ற வார்டுகளில் உள்ள குறைகளை பற்றி இவர் எதுவும் கூற இவருக்கு உரிமை இல்லை.. எல்லா வார்டுகளுக்கும் ஒரு உறுப்பினர் இருக்கிறார் ஆகையால் இவர் மற்ற வார்டுகளை பற்றி குறை கூறுவதை மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவருக்கு வாக்களித்த மக்களே இவரை வெறுக்கும் அளவிற்கு இவரது செயல்பாடுகள் உள்ளது. அதை திருத்திக்கொள்ள சொல்லுங்கள்... தங்கள் கருத்திற்கு நன்றி..

      Delete
  5. மக்கள் நலன் விரும்பிFebruary 11, 2012 at 10:51 AM

    மக்கள் நலனில் அக்கரை காட்டமல் தனது சுய விளம்பரத்திற்காக செயல்படும் இந்த முஹைதீன் இப்ராகிம் அவர்கள் இது போன்று தேவையற்ற செயல்களை நிறுத்திவிட்டு அவர்களது வார்டு மக்களுக்காக செயல்பட்டால் நல்லது..

    கீழை இளையவன் அவர்கள் வெளியிட்ட கருத்துகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

    தயவு கூர்ந்து இனி இது போன்ற தேவையற்ற, யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத செய்திகளை, 'கீழக்கரை டைம்ஸில்' வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. Jaga Deesh எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் 18 வது வார்டு உறுப்பினரா?இல்லை 5 வது வார்டு உறுப்பினரா? இல்லை கீழக்கரை சேர்மனா?? 5 வது வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் அங்கு இருக்கும் போது அங்கு உள்ள பிரச்சனைகளை பற்றி பேச இவருக்கு என்ன உரிமை உள்ளது. மேலும் அன்று நடந்த அந்த விழாவில் இவர் மட்டும்தான் கலந்து கொண்டாரா?? துணை சேர்மன் உட்பட அதிகமான உறுபினர்கள் அங்கு இருந்தார்கள் மேலும் கீழக்கரையில் உள்ள குப்பை பிரச்சனை அனைவரும் அறிந்த விஷயம். 5 வது வார்டு தவிர மற்ற அணைத்து வார்டும் சுத்தமாக இருக்கிறதா? இவரது 18 வது வார்டு குப்பை இல்லாமல் பல பலவென இருக்கிறதா?? 4.02.2012-ம் தேதி அன்று 5 வது வார்டில் துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அவர்களிடம் இவர் வீணாக வாய் தகராறு செய்துள்ளார், எந்த ஒரு மனிதனுக்கும் சரியான காரணம் இல்லாமல் ஒருவர் தகராறு செய்யும் பொழுது கோபம் வரத்தான் செய்யும் அவர் அரசு அதிகாரியாக இருந்தால் என்ன இல்லை அரசியல்வாதியாக இருந்தால் என்ன? இதை இவர் பெரியதாக்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இவர் செய்யும் செயல் அனைத்தும் இவரது சுய விளம்பரத்திற்காக மட்டும்தான் இதில் சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் வேதனை, இவருக்கு வாக்களித்த மக்களுக்காக இவர் எப்பொழுது கடமை ஆற்ற போகிறார் என்று தெரியவில்லை.. இவர் உறுப்பினர் பதவியேற்ற பிறகு மக்களுக்கு கடமை செய்ததை விட நகராட்சி கூட்டம் மற்றும் பொது இடங்களில் தகராறு செய்ததும் தேவையற்ற புகார்கள் செய்ததும்தான் அதிகம்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே உண்மை புரியும். இது எனது தனிப்பட்ட கருத்து இதில் உண்மை இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்புங்கள். இல்லை என்றால் என்ன தவறு உள்ளது என்று கூறுங்கள்.

    ReplyDelete
  7. ha Good comment posted by Jaga Deesh //////எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் 18 வது வார்டு உறுப்பினரா?இல்லை 5 வது வார்டு உறுப்பினரா? இல்லை கீழக்கரை சேர்மனா?? 5 வது வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் அங்கு இருக்கும் போது அங்கு உள்ள பிரச்சனைகளை பற்றி பேச இவருக்கு என்ன உரிமை உள்...ளது. மேலும் அன்று நடந்த அந்த விழாவில் இவர் மட்டும்தான் கலந்து கொண்டாரா?? துணை சேர்மன் உட்பட அதிகமான உறுபினர்கள் அங்கு இருந்தார்கள் மேலும் கீழக்கரையில் உள்ள குப்பை பிரச்சனை அனைவரும் அறிந்த விஷயம். 5 வது வார்டு தவிர மற்ற அணைத்து வார்டும் சுத்தமாக இருக்கிறதா? இவரது 18 வது வார்டு குப்பை இல்லாமல் பல பலவென இருக்கிறதா?? 4.02.2012-ம் தேதி அன்று 5 வது வார்டில் துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அவர்களிடம் இவர் வீணாக வாய் தகராறு செய்துள்ளார், எந்த ஒரு மனிதனுக்கும் சரியான காரணம் இல்லாமல் ஒருவர் தகராறு செய்யும் பொழுது கோபம் வரத்தான் செய்யும் அவர் அரசு அதிகாரியாக இருந்தால் என்ன இல்லை அரசியல்வாதியாக இருந்தால் என்ன? இதை இவர் பெரியதாக்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இவர் செய்யும் செயல் அனைத்தும் இவரது சுய விளம்பரத்திற்காக மட்டும்தான் இதில் சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் வேதனை, இவருக்கு வாக்களித்த மக்களுக்காக இவர் எப்பொழுது கடமை ஆற்ற போகிறார் என்று தெரியவில்லை.. இவர் உறுப்பினர் பதவியேற்ற பிறகு மக்களுக்கு கடமை செய்ததை விட நகராட்சி கூட்டம் மற்றும் பொது இடங்களில் தகராறு செய்ததும் தேவையற்ற புகார்கள் செய்ததும்தான் அதிகம்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே உண்மை புரியும். இது எனது தனிப்பட்ட கருத்து இதில் உண்மை இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்புங்கள். இல்லை என்றால் என்ன தவறு உள்ளது என்று கூறுங்கள்.////

    இவர் கேட்க்கும் கேள்விகல் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவூம் சிந்திக்க வைப்பதகாவூம் இருக்கிறது
    இப்போது மக்களுக்கு நல்லது எது கேட்டது எது என்று தெளிவாக தெரிகிறது . இனியாவது உங்களுடைய தேவையில்லாத மனுக்களை குறைத்தால் நல்லா இருக்கும் .

    ReplyDelete
  8. நகராட்சித் தலைவருக்கு எதிரான நச்சுப்பிரச்சாரம் –

    Dear chairman,

    A Keelakarai well wisher in keelakarai Muncipal Chairman i supporters.

    thank u for best wishes for keelekarai chairman and news and editer

    Muncipal Chairman to disqualify
    the above 2 undeserving candidates

    திரு. பி. சித்திக் அலி - ward No:12
    திரு.முகைதீன் இப்ராஹீம்-ward No:18
    இவரின் 18 வது வார்டையே 12 வது உறுப்பினர் தத்து எடுத்து மக்கள் பணி ஆற்றி வருவதாக நடுத்தெரு மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பேட்டி கொடுக்கும் நேரத்தை உறுப்பினர் மக்கள் சேவைக்கு ஒதுக்கி இருக்கலாம்.

    The two independant will never improve in keelakarai with all blind supporters will understand in near future.

    thank u
    A Keelakarai well wisher

    ReplyDelete
  9. naan 18vathu vaardai chaarnthavan. muhaideen iburaahim avargal sirappaana muraiyyil panigalai seythu varugiraar. vellikkilamai jumma naal athanaalthaan avvaaru purakkanitthullaar.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் நல விரும்பிFebruary 15, 2012 at 11:35 AM

      வெள்ளிக்கழமை முழுவதும் ஜிம்மா நல்ல அல்ல தோழரே.. கூட்டம் மாலை 4 மணிக்குமேல் ..

      கூட்டத்திற்கு சென்ற மற்ற யாரும் ஜிம்மா செல்லாமல் இல்லை. இவர்களது முக்கிய கடமையை செய்த பிறகு கூட்டத்திற்கு சென்றார்களே..

      Delete
  10. செய்யது ரியாஸ்February 14, 2012 at 11:57 PM

    மக்கள் நல விரும்பி என்று பெயரில் அடுத்தவரை பற்றி comment கொடுத்திருக்கும் தாங்கள் மக்கள்க்கு என்ன நலன்கள் செய்து இருக்கிறீர்கள். அடுத்தவரை பற்றி பேசும் போது தன்னை பற்றியும் நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் நல விரும்பிFebruary 15, 2012 at 11:18 AM

      செய்யது ரியாஸ் அவர்களே மக்களுக்கு ஆற்றும் நன்மையை சொல்லிக்காட்ட கூடாது.. அப்படி செய்தால் அது சேவை அல்ல விளம்பரம்..
      என்னால் செய்ய முடிந்த உதவிகளை நான் செய்வேன். அப்படி என்னால் எதுவும் நன்மை செய்ய முடியவில்லை என்றால் கண்டிப்பாக நல்லது செய்பவர்களுக்கு இடையூறாக இருக்க மாட்டேன்.. வெள்ளிகிழமை கூட்டம் நடத்த கூடாது என்று ஏன் இவர் கூறுகிறார்.?? ஜிம்மாவை காரணம் கூறினால் இவர் ஒரு மனிதனாக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். ஜிம்மா தொழுகை வெள்ளிகிழமை முழுவதும் நடைபெறுவதில்லை.. அவசரகூட்டம் மாலை 4 மணிக்கு மேல்தான். இவர் மட்டும்தான் தொழுகை நடத்துபவரா மற்ற சகோதரர்கள் தொழுகை நடத்தி விட்டு கூடத்திற்கு சென்றார்களே.????

      கூடத்திற்கு செல்ல நேரம் இல்லாத இவருக்கு செய்திதாள்களுக்கு பேட்டி குடுக்க மட்டும் நேரம் உள்ளது ????

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.