Sunday, February 19, 2012

கீழக்கரை பகுதியில் மர்ம ஆசாமிகள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் புகார் !கீழக்கரையில் இரவு நேரங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆசாமிகள் திரிவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கீழ‌க்க‌ரையில் க‌ட்டுமான‌ தொழிலில் ஆயிர‌க்க‌ண‌க்கானோர் ஈடுபட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.உள்ளூர் தொழிலாள‌ர்க‌ளை விட‌ கூலி குறைவாக‌ பெறுவ‌தாக‌ கூறி வ‌ட‌ மாநில‌ங்க‌ளிலிருந்து ஏஜெண்ட்கள் கட்டிட தொழிலாள‌ர்க‌ளை இப்ப‌குதிக்கு காண்ட்ராக்ட‌ர்களிடம் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் க‌ட்டிட‌ தொழிலாள‌ர்க‌ள் என்ற‌ போர்வையில் வ‌ட‌ மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ ச‌மூக‌ விரோதிக‌ளும் கீழ‌க்க‌ரை ப‌குதியில் ஊடுருவியிருக்கலாம் என்று‌ பொதும‌க்க‌ள் அச்சம் தெரிவிக்கின்ற‌ன‌ர்.


சேகு ச‌த‌க் இப்ராகிம்
இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ இளைஞ‌ர் சேகு ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,

கீழக்கரையில் க‌ட‌ந்த‌ 6 மாத‌ கால‌மாக வீட்டு வாசல்களில் செருப்புகள்,பல்புகள்,கால்நடைகள்(ஆடு,கோழி) திருடுவது என்று சிறு சிறு திருட்டுக்க‌ள் அதிகளவில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.சிறு திருட்டுக்களாக இருப்பதினால் பெரும்பால‌ன‌வ‌ர்க‌ள் இதை காவ‌ல்துறைக்கு எடுத்து செல்வ‌தில்லை.த‌ற்போது இர‌வு நேர‌ங்க‌ளில் மின்சார‌ இல்லாம‌ல் இருப்ப‌து இந்த‌ திருட‌ர்க‌ளுக்கு மிகுந்த‌ வ‌ச‌தியாக‌ அமைந்து விட்ட‌து.மேலும் இர‌வு ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்தும் வ‌கையில் நேர‌ங்க‌ளில் அடையாள‌ம் தெரியாத‌ சில‌ர் ஊரினுல் சுற்றி திரிகிறார்க‌ள்.

மேலும் ‌ வ‌ட‌ மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ ஏராள‌மான கட்டிட‌ தொழிலாள‌ர்க‌ள் கீழ‌க்கரையில் ஊருக்குள் வீடுக‌ளை வாட‌கைக்கு அம‌ர்த்தி த‌ங்க‌ வைக்கப்ப‌ட்டுள்ளார்க‌ள் இவ‌ர்களோடு ஊரின் ந‌ல‌னுக்கு அச்சுறுத்தும் வித‌மாக ஒரு சில‌ ச‌மூக‌ விரோதிக‌ளும் ஊடுருவி இருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து.என‌வே காவ‌ல்துறையினர் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ஏஜெண்ட்களை அழைத்து வெளி மாநில‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரின் முக‌வ‌ரிக‌ளை பெற்று தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ அடையாள‌ அட்டையை ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் முடிவு க‌ட்ட‌ப்ப‌டும் என்றார்.

4 comments:

 1. மிகவும் சரியான கருத்து, நமது ஊரின் பாதுகாப்புக்காக தலைமை காவலர் மற்றும் சேர்மன் ஆகியோரின் கையொப்பம் கொண்ட அடையாள அட்டையை உடனே தயார் செய்து கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 2. மிகவும் சரியான கருத்து, நமது ஊரின் பாதுகாப்புக்காக தலைமை காவலர் மற்றும் சேர்மன் ஆகியோரின் கையொப்பம் கொண்ட அடையாள அட்டையை உடனே தயார் செய்து கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. இந்த செய்தியை வெளியிட்ட கீழக்கரை டைம்ஸ் க்கு நன்றி , கீழக்கரையில் கட்டிட வேலைக்காக வெளி மாநிலத்தில் இருந்து அதிகமாக நமது ஊருக்கு வருகின்றனர் இதனால் நமது ஊரின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகி உள்ளது இவர்களை ஊருக்கு கொண்டுவரும் கம்பெனி ஏஜென்ட்கள் காவல் துறைக்கு அவர்களின் முகவரி மற்றும் அடையாள அட்டையை சமர்ப்பித்து உள்ளனரா என்ற அச்சம் உள்ளது . இது நமது ஊரின் பாதுகாப்பு விஷயம்.

  ReplyDelete
 4. இந்த செய்தி உண்மைதான்.. இதற்க்கு நான் ஒரு யோசனை கூறுகிறேன். நமது பகுதியில் உள்ள வாலிப நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் இரவு நேரங்களில் நம்மால் முடிந்த பகுதிகளை கண்காணிக்கலாமே. அந்த தெருக்களில் உள்ளவர்களை அவர்களுக்கு நன்கு தெரியும் புதிய நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை விசாரிக்கலாமே. வெட்டியாக இரவு நேரங்களில் நண்பர்களுடன் பொழுதை கழிக்காமல் இவ்வாறு செய்வதன் மூலமாக திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.. சரிதானே நண்பர்களே..

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.