Wednesday, February 22, 2012

பஸ் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் !விரைந்து செயல்படுத்த கோரிக்கை !



கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம் சார்பில் கூட்டம் தலைவர் அமானுல்லா தலைமையில் நடைபெற்றது.

துணை தலைவர் ராசிக்,வேலுச்சாமி ,கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் கார்மேகம் ,ஏர்வாடி தர்ஹா மாணவர்கள் சுன்னத்துல் ஜமாத் ஆலோசகர் செய்யது அலாவி ஆலிம் முன்னிலை வகித்தனர்.

இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன் வரவேற்றார்.இக்கூட்டத்தில் கூடங்குளம் அனுமின்நிலையத்தை விரைவாக திறந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் ,கீழக்கரை நகராட்சி குப்பை கிடங்குக்கும் மற்றும் இந்து மயானத்திற்கும் விரைவாக சுற்று சுவர் கட்ட வேண்டும்,

கீழக்கரை பஸ் நிலையத்தில் விரைவாக மின் கட்டண வசூல் மையத்தை திறக்க வேண்டும் என்றும்,ஏர்வாடி தர்ஹா புதிய பஸ் நிலையத்தில் காவல் நிலையம்,தினசரி மார்க்கெட் துவங்க வேண்டும் என்றும்
இவற்றை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும்,மாவட்ட கலெக்டருக்கும் மனு அனுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.துணை தலைவர் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் நன்றி கூறினார்.

1 comment:

  1. நிறைவேற்ற ஆர்வமில்லாத நகராட்சியின் இந்த தீர்மானத்திற்கு சில காலத்திற்கு முன் ஊரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து கோலாகலமாக நோட்டீஸ் ஒட்டி சம்பந்தப்பட்டவர்கள் அகமகிழ்ந்ததை கீ.ச.ந.நு.சே.இயக்கம் அறிந்திருக்கவில்லையா?

    அடே! போங்கப்பா. மீன் கடையிலே சூடை மீன் கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறது. வாங்கி ஆக்கி பொரித்து வயிறார சாப்பிட்டு விட்டு சொந்த வேலையை பார்கிரதை பற்றி யோசிஙக.

    தவறாக சொல்லி இருந்தால் மன்னிச்சிருங்கோ ஓட்டு போட்ட கீர்த்தி மிகு கீழக்கரை வாழ் கனவான்களே

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.