கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனரக உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான அசோக் லேய்லண்ட் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 ,ஐடிஐ ,டிப்ளமா தேர்வு பெற்றவர்கள்,தேர்வு பெறாதவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தார்.சேக்தாவூத் வரவேற்று பேசினார்.
இத்தேர்வில் மொத்தம் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பிளஸ் 2 மற்றும் ஐடிஐ படித்த 25 மாணவர்களும்,டிப்ளமா படித்த 51 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பிளஸ் 2 மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு ரூ6940ம் இதர படிகளும்,டிப்ளமா மாணவர்களுக்கு ரூ8400ம் இதர படிகளும் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அசோக் லேய்லாண்ட் ஓசுர் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுதுறை துணை மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் பயிற்சியாளர் வசந்த் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை எடுத்து கூறினர்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.