Sunday, February 12, 2012
கீழக்கரையில் பழுதடைந்த குழாய்களால் சாலையில் வீணாகும் குடிநீர் !
பழுதடைந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதையும்,சிலர் ரப்பர் டயரால் கட்டி தண்ணீரை வெளியேறாமல் இருக்க முயற்சித்துள்ளதையும் காணலாம்
கீழக்கரை நகராட்சியில் பெரும்பாலான தெருக்களில் உள்ள பொதுகுழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில இடங்களில் குடி நீர் குழாய்கள் பழுதடைந்து குடி தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது.
இது குறித்து அஹமது என்பவர் கூறுகையில் ,
ஒருபுறம் கீழக்கரையில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு குடம் ரூபாய் 5க்கு வாங்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. மறுபுறம் இது போல் குடிநீர் வீணடிக்கப்படுகிறது.கீழக்கரையில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் சில நேரங்களில் வாகனங்களால் குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுகிறது.சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சமயம் பழுதடையும் போது நாங்களே சரி செய்கிறோம். நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் சொன்னால் உடனே வந்து சரி செய்வதில்லை எனவே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து குடிதண்ணீர் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
பழுதடைந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதையும்,சிலர் ரப்பர் டயரால் கட்டி தண்ணீரை வெளியேறாமல் இருக்க முயற்சித்துள்ளதையும் காணலாம்.
இது குறித்து கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது ,
கீழக்கரை முழுவதும் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் விரைவில் சரி செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.