Monday, February 6, 2012
மானிய விலையில் குப்பை கூடை வழங்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு !
ஒருங்கிணைப்பாளர் லாபீர்
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சார்பில் தூய்மையான கீழக்கரையாக மாற்றுவது சம்பந்தமாக எதிர்கால செயலாக்க பணிகள் குறித்து முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில், வீடுகள் தோறும் மக்கும் ,மக்கா குப்பைகளை கொட்ட மானிய விலையில் தலா இரண்டு குப்பை கூடைகள் வழங்க முடிவு செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் லாபீர் தெரிவித்திருந்தார்
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் ,
இது போன்று தனி தனியாக குப்பைகளை பிரிப்பதால் எளிய முறையில் குப்பைகளை அகற்ற முடியும் மேலும் இதை விரிவுபடுத்தி குறைந்த விலையில் கொடுப்பதோடு எளியவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இலவசமாக கொடுப்பதற்கு முயல வேண்டும் என கூறி கூடை வழங்கும் முயற்சிக்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர்.
.
Subscribe to:
Post Comments (Atom)
தூய்மை கீழக்கரை என்ற முழக்கத்தோடு செய்யப்பட்டுவரும் "முகம்மது சதக் அறக்கட்டளை"யின் இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள். இது போன்ற முயற்சிகளுக்கு பொதுமக்கள் பேராதரவு தந்து வெற்றிபெறச் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் இந்த அறக்கட்டளை மேலும் ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு இன்னபிற நல்ல திட்டங்களை வரலாறு புகழ் கீழக்கரைக்கு தர முடியும் என பதிவு செய்கிறேன்.
ReplyDelete