கீழக்கரை 20வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கால்வாயை உடைத்து புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்தனர் ஆனால் சீராக அமைக்கதாதால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நிறைந்து வழிந்தோடி இப்பகுதி முழுவதும் அசுத்தமாகிறது என கழிவுநீர் கால்வாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலக அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட்ட மக்கள் "நகராட்சி தலைவர் நேரில் வந்து இப்பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும்" என்றனர் நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியூர் சென்றிருந்ததால் கமிசனர் முகம்மது முகைதீன் "நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் " என்று உறுதியளித்து பொதுமக்களை சமாதானம் செய்ததால பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து கமிஷனர் முகம்மது முகைதீன் மற்று பொறியாளர் அறிவழகன் கூறியதாவது,
மக்களின் வேண்டுகோளை ஏற்று சீராக அமைக்கப்படவில்லை என்று சொல்லப்படும் புதியதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாயை இடித்து விட்டு புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காயமே இது பொய்யடா காற்று அடித்த பையடா!!!!!
ReplyDeleteநேற்றும், இன்றும் தினமலர் (மதுரை பதிப்பு) பத்திரிக்கையை பிரித்தால் நாற்றமாய் நாறுகிறது. தவறாக நினைக்க வேண்டாம்.. கீழக்கரை நகராட்சியின் ஊழல் மற்றும் நிர்வாக அலங்கோலத்தின் முடை நாற்றம் தான்.. தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ள்து..
இப்போது நகரின் மூத்த குடிமகளும், அவருக்கு வ்க்கால்த்து வாங்கும் ஊர் வம்பர்களும், மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன சொல்லப் போகிறார்கள் ?? மாநில மந்திரி வந்து நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தலைக்கு மேல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.. இந்த அசிங்கம் இவர்களுக்கு தேவைதானா ??
இந்த நிலை நீடித்தால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கீர்த்தி மிகு கீழக்கரை தாங்குமா ?? பொது மக்கள் தான் பொறுத்து கொள்வார்களா ?? கொதிக்க தொடங்கி விட்டார்கள் என்பதற்கு சமீபத்திய போராட்டங்களே சாட்சி..