Monday, October 15, 2012

கீழ‌க்க‌ரையில் ப‌ல‌த்த‌ ம‌ழை! சுகாதார‌ ப‌ணிக‌ளை விரைந்து செய்ய‌ கோரிக்கை!



கீழ‌க்க‌ரையில் இன்று அதிகாலை தொட‌ங்கி ப‌ல‌த்த‌ பல‌த்த‌ ம‌ழை பெய்த‌து.நீண்ட‌ இடைவெளிக்கு பிற‌கு நீண்ட‌ நேர‌ம் நீடித்து ம‌ழை பொழிந்த‌து.இப்ப‌குதியில் நீர் நிலைக‌ள் வ‌ற‌ண்டு வ‌ரும் நிலையில் இம்ம‌ழை ச‌ற்று ஆறுத‌ல் அளிப்ப‌தாக‌ அமைந்த‌து.அதே நேர‌த்தில் ப‌ல் வேறு இட‌ங்க‌ளில் சாலைக‌ளில் த‌ண்ணீர் தேங்கி நிற்ப‌தால் உட‌ன‌டியாக‌ கொசு ம‌ருந்து தெளிப்ப‌து உள்ளிட்ட‌ சுகாதார‌ ப‌ணிக‌ளை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் மேற்கொள்ள‌ வேண்டும் என‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின‌ர் கேட்டு கொண்டுள்ள‌ன‌ர்.

இது குறித்து மக்க‌ள் சேவை அமைப்பின் முஜிப் கூறிகையில் ,

ஏற்கென‌வே கீழ‌க்க‌ரையில் டெங்கு,வைரஸ் காய்ச்ச‌ல் ப‌ர‌வி வ‌ரும் நிலையில் இன்று பெய்த‌ மழையால் த‌ற்போது சாலைக‌ளில் தேங்கி நிற்கும் த‌ண்ணீரில் கொசுக்க‌ள் உற்ப‌த்தியாகி நோய் ப‌ர‌வும் நிலை அதிக‌ரிக்கும்

.என‌வே முன் கூட்டியே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் போர்க்கால‌ ந‌ட‌வ‌டிக்கையாக‌  ந‌க‌ர் முழுவ‌தும் கொசும‌ருந்து அடிப்ப‌து,ப‌வுட‌ர் தெளிப்ப‌து உள்ளிட்ட‌ சுகாதார‌ப்ப‌ணிக‌ளை உட‌ன‌டியாக‌ மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.
ப‌ட‌ங்க‌ள்: முஜீப்

 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 15, 2012 at 8:19 PM

    செவிடன் காதில் ஊதிய சங்கு என்ற சொல் வழக்கு என்ன என்பது உங்களில் யாருக்காவது தெரியமா?? அது தான் இதுவாகும்..

    உன்னை விட்டால் எங்களுக்கு வேறு நாதி இல்லை யாரப்பே..வைத்திய செலவற்ற ஆரோக்கியத்தையும்,பரிபூரண சதுர சுகத்தையும், நீணட ஆயுளையும் தந்தருள்வாயா இரு கையேந்தி இறைஞ்சுவோர்க்கு அள்ளி அள்ளி ரஹமத்தை வழங்கும் வல்ல நாயனே, ரஹ்மானே

    ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 15, 2012 at 8:44 PM

    பலருக்கு மங்கள்ம். மற்றவர்களுக்கு அபமங்களம்..

    இரவில் பெய்த இந்த சிறு மழையால் நகர வீதிகள் அனைத்திலும் மழை நீருடன் கலந்த சாககடை நீராலும் குபபை கூழஙகள் நுறைத்து டெங்கு,.மலேரியா போன்ற உயிர் கொல்லி கொசுகளை உறபத்தியாக்கி கொண்டிருக்கிறது, ஏற்கனவே உள்ளது பற்றாது என்று.
    ஏக நாயனே. அடுத்து அடுத்து கனத்த மழைகளை அருளி, குப்பைகள் அனைத்தையும் கட்லுக்கு அடித்துச் செல்லக்கூடுய அளவிற்கு கருணை செய்வாயாக. பாழாய் போன நகராட்சி செய்யாத வேலையை எங்கள் மீது இரக்கம் கொண்டு நீயாவது கனத்த மழை மூலமாக் எங்களை காத்து ரட்சிப்பாயாக. ஆமீன்..

    மேலும் இதனால் எங்கள் வீட்டு கிணறுகளில் நீர் பெருகச் செய்ய அருள் மழை பொழிவாயாக ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.