கீழக்கரையில் சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து அபாயம் ஏற்படும் எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சுலைமான் என்பவர் கூறுகையில்,
சுமார் 15 வருடங்களுக்கு முன் கீழக்கரை பஞ்சாயத்தாக இருந்த போது இதுபோன்று அதிகளவில் மாடுகள் சுற்றி திரிந்ததால் மாடுகளை அடைத்து உரிமையாளருக்கு அபாராதம் விதித்தார்கள்.இதன் மூலம் ஓரளவு இப்பிரச்சனை கட்டுக்குள் வந்தது அதுபோல் இப்போதுள்ள நகராட்சி நிர்வாகம் முதலில் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் அதனை மீறி மீண்டும் மாடுகளை ரோட்டிலே விடுவார்களேயனால் கடும் நடவடிக்கை வேண்டும்.
மாட்டை பால் கறக்கும் நேரத்தில் மட்டும் வீட்டில் வைத்து கொண்டு மற்ற நேரங்களில் தீவனத்துக்காக வெளியே அனுப்பி விடுவது தவறான செயல்.மேலும் வெளியே சுற்றும் மாடுகள் சாலையின்குறுக்கே வருவதால் வாகனங்கள் குறிப்பாக டூ வீலர்களில் வருவோர் விபத்தில் சிக்குகிறார்கள், மாடுகளும் பாதிப்புக்குள்ளாகிறது.மேலும் ஏற்கெனவே ஊருக்குள் வராமல் செல்லும் பஸ் டிரைவர்களுக்கு, பேருந்து நிலையத்தில் முகாமிட்டுருக்கும் மாடுகளால் எங்களால் பஸ்சை பேருந்து நிலையத்துக்குள் எடுத்து வரமுடியவில்லை என்ற காரணம் சொல்ல ஏதுவாகி விடும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதை நிரந்தமாக தவிர்க்க சரியான நடவடிக்கை:
ReplyDeleteஇரு நுழைவாயிலிலும் இரு தூண்களுக்கு இடையே முதல் தரமான நான்கு அங்குலம் விட்டத்தில் ஜீ.ஐ குழாய்களை மூன்று அடி அகலத்திற்கு மூன்று அல்லது நானகு அங்குல இடைவெளி விட்டு உறுதியான முறையில் நீள் வாககில் பதிக்க வேண்டும. இதன் அடியில் கனரக வாகனங்களை தாங்கும் வகையில் உறுதியான் குட்டி மதில்கள் இரண்டு அடி இடைவெளி விட்டு காங்கிரட்டால் கட்ட வேண்டும்..
இதே புதிய பேருந்து நிலையத்தில் ஊழல் காரணமாக இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தைப் போல இதிலும் வழக்கம் போல ஊழல் நடந்தால் நாம் பொறுப்பில்லை என் பகிரங்மாக அறிவித்துக் கொள்கிறோம்..