கீழக்கரை நகராட்சிக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்ட நிதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டத்தில் மழைநீர் வடிகால் எங்கெங்கு கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் டெண்டர் விடப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தில் குறிப்பிடாத இடங்களில் கழிவுநீர் வடிகால் கட்டி வருவதாக காங்கிரஸ் நகர் தலைவர் ஹமீதுகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் வடிகாலுக்கும் ஏற்கனவே உள்ள வாய்க்காலுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. இதனால் மழைநீர், கழிவுநீர் வழிந்தோட வழியில்லை. தற்போது பெய்த மழைநீர் ஓட வழியில்லாமல் தேங்கி நின்று கடைகளுக்குள் புகுந்துள்ளது. மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து கடைக்குள் புகுந்துள்ளதால் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடைகாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ‘
மத்திய அரசு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ஒதுக்கிய நிதியில் மழைநீர் வடிகால் கட்டாமல் சட்டவிரோதமாக வாறுகால் வாய்க்கால் கட்டியுள்ளனர். எனினும் ஏற்கனவே உள்ள வாய்க்காலுடன் தொடர்பு இல்லாத அளவிற்கு ஏற்றம் இறக்கமாக கட்டியுள்ளனர்.
தற்போது பெய்துவரும் மழையால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடைக்குள் புகுந்தது. இதனால் மெத்தை தலையனை பீரோ போன்ற பொருட்கள் நனைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்மந்தமில்லாத இடங்களில் திட்டமிடாத முறையில் வெறும் அளவுக்காகவும் சொந்த லாபத்திற்காகவும் தீர்மானத்தில் இல்லாத இடங்களான வள்ளல் சீதக்காதிசாலை, வடக்கு தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா பின்புறம், புது கிழக்குத்தெரு போன்ற இடங்களில் கழிவுநீர் போக முடியாத அளவுக்கு பள்ளமான பகுதியில் வாறுகால்கட்டி அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.