கூட்டத்தில் கலந்து கொண்ட கீழக்கரை மீனவர் சங்கத்தின் அங்கத்தினர்கள்
மீனவர் சங்க உறுப்பினர்களிடம் மகாசபை கூட்டம் நடத்தாமலேயே, நடந்ததாக கூறி கையெழுத்து வாங்கியதாக கீழக்கரை பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் மீனவர் சங்க தலைவர் லுக்மாயின் ஹக்கீம் தலைமையில் நடைபெற் றது. துணை செயலாளர் அக்பர் அலி வரவேற்றார். கூட்டத்தில் மீனவர் சங்க கூட்டுறவு தேர்தலை பகிரங்கமாக, முறையாக நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்க உறுப்பினர்கள் முகைதீன் கருணை, செய்யது அபுதாஹிர் கூறுகையில்,
கூட்டுறவு அடையாள அட்டையை புதுப்பிக்க ரூ.110 கட்டவேண்டும் அதனால் கையெழுத்து போடுங்கள் என்று ஒருங்கிணைந்த மீனவர் சங்க செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முகைதீன், மீன்துறை அலுவலக உதவி அலுவலர் பழனிவேல் ஆகியோர் எங்களிடம் கேட்டனர் அதனால் கையெழுத்து போட்டோம்.
அந்த கையெழுத்து மூலம் நடக்காத மகாசபை கூட்டத்தை நடந்ததாக கூறி காட்டி உள்ளதாக அறிந்தோம். இதை எங்கள் சங்கம் கண்டிப்பதோடு, முறையாக தேர்தல் நடத்த கோரி அக். 5ல் கீழக்கரை மீன்துறை அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.