Thursday, October 11, 2012

ஏர்வாடி த‌ர்கா ச‌ந்த‌ன‌க்கூடு விழா ந‌டைபெற்ற‌து

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா ந‌டைபெறுகிற‌து. இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.விழாவையோட்டி  ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் அர‌சு விடுமுறை அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து

 சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. ஊர்வலம் முக்கிய சாலை வழியாக சென்று தர்காவை அடைந்தது. 
இந்த சந்தனக்கூடு விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இருந்து  ஏராளமானோர்
வ‌ந்திருந்த‌ன‌ர்.

ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏர்வாடிக்கு இயக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல பொதுமேலாளர் மணிமுத்து, துணை மேலாளர் (வணிகம்) முனியாண்டி ஆகியோர் செய்து இருந்தனர்.

சந்தனக்கூடு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு , டி.எஸ்.பி.க்கள் முரளிதரன், மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.