பைல் படம்
கமுதியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருபூஜைக்குச்சென்றவர்கள் மூன்றுபேர் கொலை செய்யப்பட்டனர். இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று கீழக்கரையில் இன்று அதிகாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. இங்குள்ள ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களும் நகரங்களுக்கு செல்ல மறுத்தனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் சிரமமடைந்தனர். 40க்கும் அதிகமான கல்லூரி பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் மாணவர்கள் வரமுடியவில்லை. மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய மக்கள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விவசாயிகள் விளைந்த காய்கறிகளை நகரங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறினர். கீழக்கரையில் படிக்கும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நடந்து பள்ளிக்கு சென்றனர்.
கீழக்கரை கல்லூரி தரப்பில் விசாரித்தபோது, விடுதி மற்றும் உள்ளுர் மாணவர்களை கொண்டு கல்லூரி இயங்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் பஸ்சை இயக்க முடியாது, என்றனர்
தனியார் சரக்கு ஏற்றும் வேன்கள் பயணிகள் வாகனமாக இயக்கப்பட்டு வருகிறது.இதில் ஏராளமானோர் நின்று கொண் பயணம் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.