Tuesday, October 9, 2012

கீழ‌க்க‌ரையில் டெங்குவால் உயிர‌ழ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்தின‌ருக்கு ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ நேரில் ஆறுத‌ல்!


 கீழக்கரை மேல‌த்தெரு மாதிஹுர் ரசூல் சாலை பகுதியைச் சேர்ந்த ம‌றைந்த‌ யூசுப் சாகிபு மகள் ஹதிஜத் ரில்வியா(20) என்ற‌ இள‌ம்பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்க‌ப்ப‌ட்டு ராம‌நாத‌புர‌ம் த‌னியார் மருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப‌ட்டு சிகிச்சை ப‌ல‌னின்றி உயிர‌ழ‌ந்தார்.அவ‌ர‌து ம‌றைவு அப்ப‌குதியில் பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்திய‌து.

அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ருக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

செய்தி: ந‌க‌ர் த‌முமுக‌ கீழ‌க்க‌ரை

5 comments:

  1. மனிதாபிமான செயல்.நன்றி.நல்வாழ்த்துகள்.

    நகராட்சியின் துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த சம்பந்தப்பட்ட அரசு தரப்பினரால் நடவடிக்கை எடுக்க எம்.எல.எ. சாப் அவர்கள் முய்றசி எடுத்து வெற்றி காண வேண்டுகிறோம்.

    தொகுதி நிதியின் ஒரு பகுதியை கீழக்கரை நகருக்கும் ஒதுக்கி ஏர்வாடி முச்சந்தியில் இரு பயணிகள் நிழற்குடைகள் அமைத்திடவும், கீழக்கரை முஸ்லீம் பஜாரில் நீர் மாலை கிணற்றிற்கு அருகில் ஒரு ஹைமாஸ் விளக்கு அமைத்திடவும் மனது வைக்க வேண்டுகிறோம்..

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 9, 2012 at 5:22 PM

    சிறப்பாக செயல் பட்ட கீழக்கரை வெல்பேர் அஷோஷியேஷன் மர்ஹூம் ஜனாப்.லியாகத் அலி மறைவுக்கு பின் ஏறபட்ட நிர்வாக மாற்றத்திற்கு பின் அதன் பணியில் தொய்வு காணபபடுவது போல தென்படுகிறது..

    முதலில் புதிய நிர்வாகத்தினர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் சத்தம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.. துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை எடுக்க வீடு நாடி வரும் போது அவர்கள் எழுப்பும் விசில் சத்த ஒலியால் பொது மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு.காலத் தாமதம் தவிர்க்கப் படுகிறது..மேலும் வீட்டின் உடபுறத்தில் இருந்தாலும் விசில் ஒலியால் நினைவுட்டப் படுகிறார்கள்..நல்லதொரு பராட்டுக்குரிய செயல்பாடு..

    பாச மனைவி, ஆசை மக்களை,பெற்று வளர்த்து ஆளாகிய தியாக பெற்றோர்களை,சகோதர சகோதரிகளை உற்றார் உறவுகளை,தோள் கொடுப்பான் தோழர்களை பிரிந்து கடல் கடந்து , ஆசாபாசங்களை துறந்து இயந்திர மனிதனாக அரபு, அமீரக நாடுகளில் வாழும் நமது நகர் உடன் பிறவா சகோதரர்களிடம் மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிதியினாலும், இ.டி.எ - அஸ்கான் - ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை தலைவர் பாசத்துகுரிய சாலாவுதீன் காக்கா அவர்களின் தீவிர ஆதரவு மற்றும் சளையாத ஆலோசனையின் பயனாக கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நகரின் சுகாதார சீர்கேட்டை முடிந்த அளவு சீர் செய்து வருகிறது என்பதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது..

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 9, 2012 at 6:16 PM

    கடந்த ஆராண்டு காலத்திற்கு மேலாக குப்பைகரையாக மாறிய கீழக்கரையில் வெல்பேரின் சேவை மட்டும் இல்லாதிருந்தால் நகரின் சுகாதார நிலைமையை எண்ணிப் பார்க்கக் கூட நமது மூளைகளுக்கு திராணி என்பது திண்ணமாக அறவே இருக்க முடியாது. சுகாதார சீர்கேட்டின் காரணமாக பூத்து குலுங்க வேண்டிய சில பிஞ்சுகளை இழந்தோம்.

    அந்த ஆதஙகத்தில் தான் மனம் அழுது இதை பதிவு செய்கிறேன்... வெல்பேர் சேவையில் தொய்வு மட்டுமல்ல முன்னை விட இன்னும் சிறப்பாக முனைப்புடன் செயல் பட வேண்டும் என பொது மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்..உங்கள் சேவை அவ்வளவு மகத்தானது.. சீரிய சிறப்புடையது.

    நகரில் பெரும்பாலான பொது மக்கள் அசைவ உணவுக் காரர்கள். ஆகவே வீட்டில் சேரும் மீன்,இறைச்சி மற்றும் சில மணி கூறுகளில் நாற்றமெடுக்கும் கழிவுகளை ஒரு நாளைக்கு மேல் பாதுகாக்க முடியாது. சமீப காலத்தில் வெல்பேர் துப்பரவு பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்கிறார்கள், குறிப்பாக இடி சந்துகளில் உள்ள வீடு களுக்கு..காரணம் புரியவில்லை. அச்சமாக இருக்கிறது.. எனென்றால் இந்த குறைபாடு பொது மக்களை நடு இரவில் நாற்றமெடுத்த கழிவு குப்பைகளை நடு வீதியில் வீசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும்.. தேவையா?? பின்னர் பொது மக்களை நோவதில் யாது பயன்??

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழவின் ஆதாரம்..

    மேலும் துப்பரவு பணி மேற்பார்வையாளார்களின் அலைபேசி எண்ணையும் பரவலாக அறியப்பட வைக்க வேண்டும். அப்போது தான் குறை உள்ளவர்கள் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்..

    வாழக நலமுடன், நாங்களும் நீங்களுமாக..

    ReplyDelete
  4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 9, 2012 at 6:31 PM

    சங்கை மிகு குர்ஆனின் அறிவிப்பு:

    அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். அத்தியாயம் 74 அல் முத்தஸ்ஸிர் (போர்த்திக் கொண்டவர்) வசனம் 5

    உங்கள் இறைவனின்ன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (க் கஷ்டங்களை)நீங்கள பொறுத்திருங்கள் வசனம் 7

    ReplyDelete
  5. கீழக்கரை பெரிய அம்பலம் தெருவில் உள்ள எங்க வீட்டிலும் ரமழான் மாதம் இந்த நோயினால் உயிர் இழப்பு நடந்தது ஜவாஹிருல்லா காக்கா.............

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.