கீழக்கரையில் மீன் துறை அலுவலர் முறைகேட்டை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருங்கினைந்த மீனவர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார்.இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் ,நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.மீன் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.
இது குறித்து மீனவர் சங்கத்தின் துனை செயலாளர் அக்பர் அலி பேசுகையில்,
இதுவரை இப்பகுதி மீனவர்களுக்கு அரசின் நலதிட்டம் எதுவும் வரவில்லை.மீனவர் அடையாள அட்டையை புதுபிக்க வேண்டும் என மீனவர்களிடம் கூறி ஏமாற்றி கையெழுத்து வாங்கி நடக்காத கூட்டத்தை நடந்ததாக சங்கத்தை சேர்ந்த ஒருவர் மீன் துறை அலுவலர் பழனிவேல் உதவியுடன் கூட்டுறவு மகாசபை கூட்டம் நடந்ததாக மீன் துறை மேலதிகாரிகளிடம் தவறான தகவலை தந்துள்ளனர் இவர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டால் பல முறை இப்படித்தான் செய்துள்ளோம் என்கின்றனர். இதனை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் இவ்வாறு அவர் பேசினார் மேலும் முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற வேண்டும் இல்லையேல் உண்ணாவிரதம் நடைபெறும் என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.