தொடர் மின்சார தடையால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறிப்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கு "கட்ஆப்' மார்க்கில் அரசு சலுகை அளிக்க வேண்டும்'' என கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தினர்.
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம், தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது. மெட்ரிக்., பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகம்மது காசீம், ஜமால் இபுராகிம் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பெற்றோர்கள் ,
தொடர் மின் தடையால் சரியாக படிக்க முடியாமல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.மின் தடையால் மாணவ,மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளகிறார்கள் எதிர்பார்த்த "கட் ஆப்"மார்க்பெற முடியாத நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் உள்ளனர்.எனவே "கட்ஆப்" மார்க்கில் அரசு மாணவ,மாணவியருக்கு சலுகை அளிக்க வேண்டும்.எங்களது வேண்டுகோளை பள்ளி நிர்வாகத்தினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம்,
மாணவர்களின் கல்விதரம் குறையாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.பெற்றோர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஜோசப் சார்த்தோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை, நிர்வாக அலுவலர் மலைச்சாமி செய்திருந்தார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.