கீழகக்ரை அருகே வண்ணாங்குண்டு பள்ளி அருகே டாஸ்மாக் மதுகடையை அங்கிருந்து அகற்ற கோரி எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளி எதிரே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.இக்கடைக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியில் இடையூறு செய்வதால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு தொந்தரவாக உள்ளது.எனவே இக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்ட நடைபெற்றது.
வண்ணாங்குண்டு எஸ் டி பி ஐ நகர் தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர்கள் செய்யது இப்ராகிம்,சரீப் சேட்,மாவட்ட துணை தலைவர் பைரோஸ்கான்,பொருளாளர் சோமு,ஒருங்கினைப்பாளர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள்,பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம் பேசுகையில்,
வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக்கு அருகே(100 மீட்டருக்குள்)மதுக்கடைகள் இருக்க கூடாது என்று சட்டம் உள்ளது.ஆனால் அரசு அதிகாரிகள் அந்த சட்டத்தை மீறி வண்ணாங்குண்டுவில் பள்ளிக்கு எதிரே உள்ள கடையை அகற்ற வேண்டும் என பலமுறை அரசிடம் முறையிட்டும் பயனில்லை எனவேதான் இந்த ஆர்ப்பாட்டம் இதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்றார்.
இது போன்று சட்ட திட்டங்களை மீறி அனுமதி அளித்த அரசு அதிகாரிகளை மன்சாட்சிக்கு பயந்து பாரபட்சம் இல்லாமல் கைது செய்து குறைந்தது மூன்று மாதத்திற்கு கடுங்காவல் தண்டனையை அதுவும் கால தாமதம் இல்லாமல் கொடுத்து தணடித்தால் தான் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்..மேலும் குறைந்தது ஐந்து ஆண்டு காலத்திற்கு பணி இடை நீக்கம் செய்தும், இந்த காலக்கட்த்திற்குரிய பணி ஆதாயங்களையும் கண்டிப்பாக தடை செய்து பறிக்க வேண்டும்..இது லஞ்ச லாவண்ணியத்தில் ஈடு படுவோருக்கும் பொருந்தும்..
ReplyDeleteஎங்கே நடக்கப் போகிறது ?? சட்டத்தின் பாதுகாவலர்களே சிக்கலில் உள்ளார்கள்..