வடக்குத்தெரு கொந்தன் கருணை அப்பா தர்ஹா அருகில் தரமற்ற பணிகளால் சில நாட்களில் கழிவு நீர் கால்வாய் உடைந்துள்ளதாக் குற்றஞ்சாட்டுகின்றனர்
கீழக்கரை நகரில் புதிய குடிநீர் பைப் அமைத்தல் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்கான பணிகள் தரமற்று இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்,காங்கிரஸ் நகர் தலைவர் ஹமீதுகான் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சேர்ந்த அஜீஸ் உள்ளிட்ட சிலர் வலியுறுத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் ஹமீது கான் கூறுகையில் ,,
பணிகளை ஒப்பந்தத்தின் படி தரமாக காண்டிராக்டர்கள் செய்ய வேண்டும்.சில இடங்களில் கழிவு நீர் கால்வாய் அமைத்த சில நாட்களில் உடைந்துள்ளது வடக்கு தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா அருகில் நீங்களே பார்க்கலாம்.தரமில்லாத சிமெண்ட் கலவையால் அமைத்தால் இப்படித்தான் ஆகும். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் கூறுகையில்,
குடிநீர் குழாய் அமைப்பதற்கு சாலைகளை உடைத்து பணிகளை நடைபெறுகிறது.இதனால சாலை சேதமடைகிறது.தற்போது இந்த சாலைகள் அமைக்கப்பட்டது.குடிநீர் குழாய்களை அமைத்து விட்டு புதிய சாலைகளை அமைத்திருக்காலமே தற்போது மீண்டும் சாலைளை புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பணம் விரயமாகிறது.எனவே இனியாவது இதுபோன்ற நிலை வராமல் தடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
இப்பணிகள் மிக மோசமாக அரைகுறையாக நடைபெறுகிறது.3 அடி தோண்டி புதைக்கப்பட வேண்டிய குடிநீர் குழாய்களை சில இடங்களில் ரோட்டின் மேல் பகுதியிலேயே புதைத்துள்ளார்கள்.இதனால் குடிநீர் குழாய்கள் உடைந்து விடும் அபாயம் உள்ளது.மக்கள் பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும் எனவே உடனடியாக ஒப்பந்தராரர்களை அழைத்து நடவடிக்கை எடுத்து சரி செய்யவேண்டும் என்றார்.
கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா கூறுகையில்,
குடிநீர் பைப்களை 3 அடிக்கு தோண்டி புதைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
கீழக்கரை நகராட்சியின் மேற்பார்வையாளரிடம் கேட்ட போது,
சில இடங்களில் வேறு பணிகளுக்கான் குழாய்கள் கீழே புதைக்கப்பட்டிருப்பதால் குடி நீர் குழாய்கள் 3 அடிக்கு புதைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.சில இடங்களில் வீட்டுக்காரர்களும் அவர்கள் வீட்டு பகுதிகளில் குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஆனாலும் அரசு வழிகாட்டுதல்படி முறையான பணிகள் நடப்பதற்கு கண்காணித்து பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்
நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியாவிடம் கேட்ட போது,
அனைத்து பணிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பணிகளின் குறித்த குறைகளை நிச்சயம் கவனித்தில் கொண்டு நிவர்த்தி செய்வோம் என்றார்.
செய்தி : சேகு சதக் இப்ராகிம்
இப்போது செயல்படும் நகராட்சி நிர்வாகம் பதவி ஏற்ற காலம் முதலே குழப்பமும் குளறுபடியும் நிறைந்ததாகவே உள்ளது.. ஏனைய மக்கள் பிரதிநிதிகளால் எழுப்பப்படும் அனைத்து குளறுபடியான பிரச்சனைகளுக்கும்(அவரது கணவரின் மேல் உள்ள குற்றசாட்டு உள்பட) நகரின் மூத்த குடிமகள் சப்பை கட்டான பதிலை தான் சொல்லுகிறார்கள்..நிச்சயமாக இது சீரான நிர்வாகத்தின் வெளிப்பாடு அல்ல..
ReplyDeleteநடப்பவை அனைத்தையும் சீர் தூக்கி பார்த்தால் தலைவிதியை நொந்து கை கட்டி, வாய் பொத்தி மௌனி களாக இருப்பது தான் சாலச் சிறந்தது .. ஆனால்.... காலம் இப்படியே இருந்து விடாது..