Thursday, October 4, 2012

மனைவி புகார்!க‌ண‌வ‌ர் உள்ளிட்ட‌ 7பேர் மீது வ‌ழ‌க்கு !

மனைவி புகார்!க‌ண‌வ‌ர் உள்ளிட்ட‌ 7பேர் மீது வ‌ழ‌க்கு !

கீழ‌க்க‌ரை ம‌க‌ளிர் காவ‌ல்துறையில் புகார் அளித்துள்ள‌ சித்தி ச‌பிக்கா த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் காஜா அலாவுதீன். இவரது மகள் சித்தி சபிக்காவுக்கும் (23) கீழக்கரை கஸ்டம்ஸ் ரோட்டை சேர்ந்த சீனி முகமது மகன் ஜகுபர்அலிக்கும் (34) கடந்த 2006ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.

திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், 15 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் மதிப்பில் சீர்வரிசை மற்றும் பெண்ணின் பெயருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடும் கொடுக்கப்பட்டதாம். அங்கு குடித்தன‌ம் ந‌ட‌த்தி வ‌ந்த‌ ஜகுபர் அலி வெளிநாடு சென்று திரும்பி வ‌ரும் போது த‌னது ம‌னைவியை த‌ன‌து தாய் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வெளிநாடு செல்லும் போது த‌ன‌து தாய் வீட்டிலேயே இருக்க‌ வேண்டும் என கூறி விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் சித்தி சபிக்காவை கணவரின் தாயார் , கணவரின் சகோதரிகள்  ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்தும், கொலைமிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து கடந்த ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் சித்தி சபீக்கா புகார் செய்து விசாரணையும் நடந்தது. கணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் வரை த‌ன‌து தாய் வீட்டிற்கு வ‌ந்து சித்தி சபிக்கா தங்கியிருந்துள்ளார்.

இதற்கிடையே, வெளிநாடு சென்ற கணவர் ஜகுபர்அலி கடந்த மாதம் ஊர் திரும்பினார். கணவர் வந்த தகவலறிந்து அவரது வீட்டுக்குச் ம‌னைவி சித்திச‌பிக்கா சென்ற போது, கூடுத‌லாக‌ வரதட்சணை பணம் கேட்டு கணவர் ஜகுபர் அலி உள்ளிட்ட ஏழு பேரும் சித்ரவதை செய்த‌தாக‌ சித்தி சபீக்கா செய்த புகாரின் பேரில் கீழக்கரை மகளீர் காவல்நிலைய எஸ்ஐ ஹெலன் ராணி மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஏழு பேரையும் தேடி வருகின்றார்.

2 comments:

  1. இந்த நீவ்சை பொறுத்த வரைக்கும் கடந்த 2 வருட காலமாக பிரசினை நடக்குது எல்லாம் சமாதானம் செய்து சேர்த்து வைத்தார்கள் இவர்கள் பிரிந்த பிறகு இரண்டு பெண் பிள்ளைகளின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியே?இதற்கு பெரியவர்கள் இருவரையும் அழைத்து பேசி சமாதான முறையில் சேர்த்து வைப்பது தான் அந்த 2 பிள்ளைகளின் வாழ்க்கை பிரகாசமளிக்கும் என்பது என்னுடைய கருத்தாகும்...இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.