கீழக்கரை 15வது வார்டு மேலத்தெரு மாதிஹுர் ரசூல் சாலையில் வசித்து வந்த யுசுப் சாகிப் மகள் ஹதிஜத் ரில்வியா(20)என்ற இளம்பெண் கடந்த செப்30ல் டெங்கு காய்ச்சலில் உயிரழந்ததை தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கையின் பேரில் நேற்று சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் கதிரேசன் தலைமையில் அதிகாரிகள் கீழக்கரையில் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் கதிரேசன் கூறியதாவது,
கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகள்,கல்யாண மண்டபங்கள்,மதரசாக்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் புகை மருந்து அடிப்பதற்கும் கிணறுகளில் டெமிபாஸ் எனப்படும் மருந்து ஊற்றுவதற்கும் உத்தவிட்டுள்ளேன்.
தவிர ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒரு கிராம செவிலியர் ஒரு களப்பணியாளர் ஆக மூன்று குழு வீதம் நான்கு குழுக்கள் அமைத்து காய்ச்சலில் அதிகம் பாதிக்கப்பட்ட வார்டுகளான 13 மற்றும் 15 அதன் அருகில் 14 18 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கண்காணித்து ஒரு வீட்டில் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தால் உடனடியாக கவனித்து அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
பொது மக்கள் புகை மருந்து அடிக்கவரும் ஊழியர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதோடு ,சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து டெங்கு,மலேரியா போன்ற நோய்களை கீழக்கரையிலிருந்து மட்டுமல்ல ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தே விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இவருடன் விருதுநகர் பூச்சியியல் வல்லுநர் கண்ணன்,மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ்,மற்றும் நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன்,சுகாதார ஆய்வாளர் முகம்மது யூசுப், மேற்பார்வையாளர் அறிவழகன்,மலேரியா சுகாதார ஆய்வாளர் செல்லக்கண்ணு கவுன்சிலர்கள் ரபியுதீன்(13வது வார்டு),மஜிதா பீவி(15வது வார்டு) ஆகியோர் உடன் சென்றனர்.
டெங்குவால் உயிரழப்பு ஏற்பட்ட 15வார்டு பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு தோட்டத்தில் குடியிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தனலட்சுமி(47),அவரது மகள் சந்தியா(24),மருமகன் நந்தகுமார்(27),மகன் ராஜ்குமார்(19)பேரன் ரித்தீஸ்குமார் ஆகிய ஐந்து பேர் கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால் அங்கு சென்ற வல்லுநர் குழு தோட்டத்தை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.அனைவருக்கும் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.