Friday, October 5, 2012

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ புதிய‌ எஸ்பி பொறுப்பேற்பு!ப‌க‌ல் 12 ம‌ணி முத‌ல் 2ம‌ணிவ‌ரை பொதும‌க்க‌ள் குறைக‌ள் தெரிவிக்க‌லாம்!


சென்னையில் நிலமோசடி தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பணியாற்றிய என்.எம்.மயில்வாகணன் புதன்கிழமை ராமநாதபுரம் புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

  ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக பணிப் பொறுப்பேற்றுக் கொண்ட என்.எம்.மயில்வாகணன் 1998-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் பரமக்குடியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர். சேலம் எஸ்.பி.யாகவும், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையாளராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

  ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட இவர், சென்னையில் நில மோசடி தடுப்பு பிரிவு எஸ்.பியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது பணிமாறுதல் செய்யப்பட்டு புதிதாக ராமநாதபுரம் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அனு என்ற மனைவியும், அர்ஜூன், ஆகர்ஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

பொதுமக்கள் தினசரி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனவும், முக்கியப் பிரச்னைகளுக்கு எந்த நேரத்திலும் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 5, 2012 at 9:52 PM

    எஸ்.பி. மயில் வாகணண் அவர்களின் தொலைபேசி எண் குறிப்பிடவில்லையே. அவசரத்திற்கு உதவுமே

    இவராவது கீழக்கரையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.