ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் துவக்க விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் யூசுப் சாகிபு தலைமை வகித்தார்.
தில்லையேந்தல் ஊராட்சி உறுப்பினர் நபிஷா, 500 பிளாட் ஜமாத் செயலர் ஜமால்பாருக் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.
சுகாதார விழிப்புணர்வு, மருத்துவ முகாம், பள்ளியில் துப்புரவு பணி, கோயிலில் உழவாரப்பணி, பள்ளிவாசல் வளாகம் துய்மை செய்தல், எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தன. தில்லையேந்தல் ஊராட்சி 500 பிளாட் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலர் செய்யது ஒலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர் செய்யதுசலீம் நன்றி கூறினார்.
மாணவன் என்றாலே சக மாணவனை கேலி செய்வான் ஆசிரியருக்கு இட்ட பெயர் இருக்க கெட்ட பெயர் சூட்டுவான். வீணாக வாழ்கையில் குப்பை கொட்டுவான் என்ற சின்னத்திரை வண்ணத்திரை ஊடகங்களின் ஊன கருத்தை பொய்மை படுத்தி நாங்களும் சமூக ஆர்வலர்கள் சமுதாய காவலர்கள் என்று பறை சாற்றிய மாணவர்களே ஆயிரம் வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள்..
ReplyDeleteஇது போல் நகரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் என்.எஸ்.எஸ் அமைப்புகள் நம்து நகருக்கும் முதல் முக்கியத்துவம் கொடுத்து நகரை பகுதி வாரியாக பிரித்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது போல் செயல் பட்டால் மக்களுக்கும் சுகாதார விழிப்புணர்வு உண்டாகும்.நகரும் நலம் பெறும்.. மேலும் இது விஷயத்தில் பெற்றோர்களும் மாணவச் செல்வங்களை ஊக்கப் படுத்த வேண்டும்..
நகராட்சியின் செயல் அற்ற தன்மையால் நகரின் சுகாதார சீர்கேட்டால் சமீப காலத்தில் இளம் பிஞ்சுகளை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் எனபதை மனதில் கொள்ள வேண்டும்..
super .........
ReplyDelete