Monday, October 1, 2012

நிறைவ‌டையும் நிலையில் உள்ள‌ ப‌ணிக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு ஏன்? க‌வுன்சில‌ர்க‌ள் எதிர்ப்பால் தீர்மான‌ம் ர‌த்து!

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
முடிந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு ஏன்?
 
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில், முடியும் தருவாயில் உள்ள வாறுகால் பணிக்கு மீண்டும் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்குவது ஏன் என கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதுகுறித்த தீர்மானம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
 
கீழக்கரை நகராட்சி கூட்டம், தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகம்மது முகைதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாத‌த்தின் ஒரு ப‌குதி...

துணைத்தலைவர்: கீழக்கரையில் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. http://keelakaraitimes.blogspot.com/2012/08/blog-post_5167.html இதில் கீழக்கரைக்கான கடை ஒன்று மட்டும்தான். மற்ற இரு கடைகளும் காஞ்சிரங்குடி, நத்தம் ஊராட்சிகளுக்குரியவை. வேறு ஊராட்சிக்கு சேர்ந்த இரு கடைகளும், கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் சிலரின் நடவடிக்கைகள் முகம் சுழிக்க வைப்பதாய் இருப்பதால், அப்பகுதியில் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே அந்த கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மன்ற கூட்டத்திற்கு அரசு மருத்துவமனை, மலேரியா மின்துறை அதிகாரிகளை அழைக்க வேண்டும். அப்போதுதான் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எடுத்துக்கூறி உடனடி தீர்வு காண முடியும்.
 
கமிஷனர்: அனைத்துக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இடிமின்னல்ஹாஜா: நகரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதிமுதல் பிளாஸ்டிக் பை, மற்றும் கப் பயன்பாட்டிற் கும் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆய்வுகளால் குறைந்த பயன்பாடு தற்போது மீண்டும் அதிகரித்து விட்டது. அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பை, கப் விற் பனை செய்யப்படுகிறது.
 
கமிஷனர்: அடுத்தவாரம் முதல் கடைகளில் ஆய்வுசெய்யப்படும்.
ஜெயபிரகாஷ்: 10வது வார்டில் ரூ.5லட்சம் ஒதுக்கி வாறுகால் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும், அந்த பணிக்காக ரூ.5 லட்சம் ஒதுக்குவது ஏன்?
 
பொறியாளர்: அந்த பணிக்கு கூடுதல் மதிப்பீடு செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
(இதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதுகுறித்த தீர்மானத்தை தலைவர் ரத்து செய்தார்)
 
முகைதீன் இபுராகிம்: பிளாஸ்டிக் பை 40 மைக்ரான் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்கு ரூ.3,500க்கு மிஷின் வாங்குவதற்கு கொட்டேசன் வாங்கி தீர்மானத்தில் வைத்துள்ளீர்கள். ஆனால் ரூ.6 லட்சம் மதிப்பில் இரண்டு 15 கே.வி ஜெனரேட்டர் வாங்குவதற்கு ஏன் கொட்டேசன் வாங்கி வைக்கவில்லை?
 
பொறியாளர்: தொகை அதிகமாக உள்ளதால் கொட்டேசன் வாங்கவில்லை. அதில், உத்தேச மதிப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்.
 
ஜெயபிரகாஷ்: வடக்குத்தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா பகுதியில் 4லட்சம் மற்றும் 1லட்சத்து80ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த தி.மு.க ஆட்சியில் 10லட்சம் கொள்ளளவு தொட்டி கட்டவும் பைப் பதிக்கவும் ரூ.1 கோடியே 66லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி தற்போது குடிநீர்வடிகால் வாரியத்தில் உள்ளது. அந்த நிதியை பெற்று புதிதாக தொட்டிகட்டுவதை விட்டு விட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய தொட்டியை பராமரிப்பு செய்ய ரூ.5லட்சம் ஒதுக்கியது ஏன்? மக்கள் பணத்தை ஏன் வீணடிக்கப்படுகிறது?
 
பொறியாளர்: குடிநீர் வாரியத்திடம் இருந்து நிதியை திரும்ப பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் புதிய தொட்டி கட்டுவதற்கு இரு வருடமாவது ஆகும் என்பதால் இதனை பராமரிக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 1, 2012 at 7:52 PM

    சிலர் அழுவார். சிலர் சிரிப்பார். நாம் அழுது கொண்டே சிரிக்கும் ஜாதி.. வேறு என்னத்தை சொல்ல இந்த பதிவை படித்து விட்டு??

    ஒரு ஆறுதலான விஷயம்.. துணைத் தலைவர் சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்கள் சொன்ன யோசனை.. வரவேற்கத்தக்கது.கட்டாயம் அமுல் படுத்த வேண்டிய ஒன்று. மன்ற கூட்டத்திற்கு மட்டும் அல்ல, மூன்று மாதத்திற்கு ஒரு முறை மக்கள் பிரதிநிதிகளூடன் ஊரின் முக்கிய பிரமுகர்களையும் அழைத்து மன்றத்தில் நடத்தப்படும் கூட்டத்திற்கும் (மன்றத்தின் தீர்மானப்படி)நகரில் உள்ள ம்லேரியா, பொது மருத்துவமனை. மின் வாரியம் அதிகாரிகளையும் அவசியம் பங்கேற்க செய்ய வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.