Friday, October 26, 2012

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் பெருநாள்! (ப‌ட‌ங்க‌ள்)!


பெருநாள் தொழுகையையோட்டி குவிந்த‌ ம‌க்க‌ள்பெருநாள் தொழுகையையோட்டி குவிந்த‌ ம‌க்க‌ள் ! ப‌ட‌ங்க‌ள்:ந‌ன்றி ,ஹாஜா,சீனி முக‌ம்ம‌து,சுல்தான்


 
ப‌ட‌ விள‌க்க‌ம்:துபாய் தேரா ஈத்கா திட‌லில் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்

தியாக‌ திருநாளை(ஈதுல் அழ்ஹா)யோட்டி இன்று அமீர‌க‌த்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் பெருநாள் தொழுகை ந‌டைபெற்ற‌து.


அமீரகத்தில் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.

அதிகாலை  முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி குவிய‌ தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.50 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு நாடுகளை சார்ந்த இஸ்லாமிய‌ மக்கள் தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 26, 2012 at 7:41 PM

    உள்ளூர், வெளியூர். தூர தேசத்தில் இருக்கும் உயரிய அன்புக்கும். மட்டில்லா பாசத்திற்கும் உரிய இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே, அன்பர்களே,அன்பிகளே,

    அஸ்ஸலாமு அலைக்கு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ..

    ஈத் முபாரக் ஈத் முபாரக் ஈத் முபாரக்

    இந்த புனித மிக்க ஈதுல் அல்ஹா தினத்தில் எந்தன் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனங் கொள்ளா மகிழ்ச்சி அடைகிறேன்.. அத்துடன் வல்ல நாயன் இடத்தில் தங்கள் குடும்பத்தினர் அனவருக்கும் வைத்திய செலவற்ற சகலவிதமான, பரிபூர்ணமான நற் சுகங்களும். சகல விதமான குறைவில்லா சௌபாக்கியங்களும் அருள இரு கரம் ஏந்தி உளமார துவா செய்கிறேன்..

    மேலும் எந்தன் வாழ்த்துக்களையும், துவாக்களையும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தவறாமல்தெரியப்படுத்துகள்..

    வஸ்ஸலாம்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.