ராமநாதபுரத்தில் நள்ளிரவில் குடோனில் ஏற் பட்ட தீவிபத்தில் ரூ.8 லட் சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமாகின.
ராமநாதபுரம் சாலைத் தெருவில் நூர்முகமது என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடையின் அருகே மாடியில் குடோன் உள்ளது. இங்கு பண்டிகைக்காக கைலிகள், பனியன், ஜட்டி, துண்டுகள் ஆகியவற்றை அதிக அளவில் இருப்பு வைத்திருந்தார்.
இந்த குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. இன்று அதிகாலை குடோனிலிருந்து புகை வந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உரிமையாளர் நூர்முகமதுவுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை உதவிக் கோட்ட அலுவலர் ஹக்கீம் பாட்சா, நிலைய அலுவலர் சாமிராஜ் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
ஏணிகள் மூலம் மாடிக்குச் சென்று காலை 5.15 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடோனிலிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கைலி, பனியன்கள், துண்டுகள் எரிந்து நாசமாகின. ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன், இன்ஸ்பெக்டர் கணேசன் தீவிபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.