Thursday, October 11, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கவுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா கைது !
                                                                                            ம‌னோக‌ர‌ன்
இடிமின்ன‌ல் ஹாஜா

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் மேற்பார்வையாள‌ர் ம‌னோக‌ர‌ன், க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா த‌ன்னை அவ‌தூறாக‌ பேசிய‌தாக‌வும்,கொலை மிர‌ட்ட‌ல் விடுத்த‌தாக‌வும் கொடுத்த‌ புகாரில் கீழ‌க்க‌ரை போலீசார் வ‌ட‌க்குதெரு ப‌குதி 20வ‌து வார்டு க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜாவை இன்று  கைது செய்த‌ன‌ர்.பின்ன‌ர் ராம‌நாத‌புர‌ம் கோர்டில் ஆஜ‌ர்ப‌டுத்த‌ப்ப‌ட்டு 15நாள் ரிமாண்டில் வைக்க‌ப்ப‌ட்டார்.

இது குறித்து க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா த‌ர‌ப்பில் கூறிய‌தாவ‌து,

வ‌ட‌க்குதெரு ப‌குதியில் சிஎஸ்ஐ ப‌ள்ளி அருகே  நீண்ட‌ கால‌மாக‌ அகற்றாம‌ல் இருந்த‌ குப்பையை அற்றுவ‌த‌ற்கு ம‌னோக‌ர‌னிட‌ன் சொன்ன‌ போது க‌மிஷ‌ன‌ரிட‌ம் சொல்லுங்க‌ள் என்று கூறி வாய்வ‌ந்த‌ ப‌டி ம‌னோக‌ர‌ன் அவ‌தூறு பேசி விட்டு த‌ற்போது பொய்யான‌ புகார் அளித்துள்ளார்.சட்ட‌ப‌டி ச‌ந்திப்போம் என்ற‌ன‌ர்.

ப‌ட‌ விள‌க்க‌ம்:‍சென்ற‌ வார‌ம் நக‌ராட்சி மேற்பார்வையாள‌ர் ம‌னோக‌ர‌னிட‌ம் குவிந்து கிட‌க்கும் குப்பைக‌ளை அக‌ற்ற‌ சுட்டி காட்டும் க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா

ந‌க‌ராட்சி மேற்பார்வையாள‌ர் ம‌னோக‌ர‌னிட‌ம் தொட‌ர்பு கொண்டு கேட்ட‌போது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்துக்கு வ‌ந்த‌ க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா சிஎஸ்ஐ அருகே குப்பையை அகற்ற‌ சொல்லி மிர‌ட்டும் தோர‌ணை‌யில் என்னிட‌ம் தாறுமாறாக பேசிய‌ அவ‌ர்  வெளியே வா பாத்துக்குறேன் என்று கொலை மிர‌ட்ட‌ல் தொனியில் ச‌த்த‌மிட்டார்.ஏர்வாடி சந்த‌ன‌ கூடு விழாவிற்காக‌ சென்று விட்ட‌ ந‌க‌ராட்சி ப‌ணியாள‌ர்க‌ள் ப‌ற்றாகுறையால் அப்ப‌குதியில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் இருந்த‌து.ஒருநாள் முன்பாக‌ கூட‌ க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா ஆலோச‌னைப்ப‌டி அப்ப‌குதியின் இன்னொரு புற‌த்தில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.அதை புரிந்து கொள்ளாம‌ல் ஆவேச‌மாக‌ என்னை ச‌த்த‌மிட்டு மிர‌ட்டினார். அங்கு சாலையில்,அருகிலுள்ள‌ க‌டையில் நின்றிருந்த‌வ‌ர்க‌‌ளை கேட்டால் உண்மை தெரியும்..என‌வேதான் வேறு வ‌ழியின்றி என‌து பாதுகாப்பு க‌ருதி  புகார் அளித்தேன் என்றார்.


கைது குறித்து க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம் ம‌ற்றும் ஜெய‌பிரகாஷ் ஆகியோர் கூறுகையில்,

நாங்க‌ள் கேள்விப‌ட்ட‌ வ‌ரையில் ம‌னோக‌ர‌னின் குற்ற‌ச்சாட்டில் உண்மையில்லை வேண்டுமென்றே பொய்யாக‌ புகார் கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.எத்த‌னையோ புகார்க‌ளுக்கு வ‌ழ‌க்கு ப‌திவு செய்யாத‌  கீழ‌க்க‌ரை போலீசார் இத‌ற்கு ம‌ட்டும் அவச‌ர‌ அவச‌ர‌மாக‌ வ‌ழ‌க்கு ப‌திவு செய்து கைது செய்த‌து ஏன்? இந்த‌ கைது க‌ண்டிக்க‌த‌க்க‌து என்ற‌ன‌ர்.

க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
,
http://keelakaraitimes.blogspot.com/2012/05/blog-post_4865.html

கீழ‌க்க‌ரையில் ந‌டைபெற்ற‌ குறை தீர்ப்பு நாளில் காவ‌ல்துறை டி எஸ் பி மீது நேர‌டியாக் க‌வுன்சிலர் இடிமின்ன‌ல் ஹாஜா குற்ற‌ம் சாட்டியிருந்தார்.என‌வே இந்த‌ கைதில் உள் நோக்க‌ம் இருக்கும் என‌ ச‌ந்தேக‌ப்ப‌டுகிறேன் என்றார்.

 

3 comments:

 1. மதிப்பிற்குரிய திரு ஹமீது யாசின் அவர்களுக்கு நீங்கள் இன்று மாலை நீங்கள் வெளியட்ட கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கவுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா கைது ! செய்தி தொடர்பான சில உண்மை தகவல்களை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

  இதே கீழக்கரை டைம்ஸ் மூலமாக வெளிவந்த தகவலை

  http://keelakaraitimes.blogspot.in/2012/09/blog-post_29.html

  இந்த லின்க்கை கிளிக் செய்து படித்து பாருங்கள் பின் திரு மனோகரன் செய்த புகரில் உண்மை இருகிறதா இல்லையா என்று உங்களுக்கு தெளிவாக புரியும்.

  இந்த புகரில் உண்மை இல்லை என்று கூறியுள்ள திரு முகைதீன் இப்ராஹிம் மற்றும் குற்றம் சட்டபட்டுல்ல இடி மின்னல் ஹாஜா இவர்கள் இருவரும் சில வாரங்களுக்கு முன் நடந்த நகராட்சி கூடத்தில் 10 வது வார்டு கவுன்சிலர் திரு அஜ்மல்கானிடம் கைகலப்பு தகராறு செய்துள்ளனர். இது யாவரும் அறிந்ததே ஆகையால் இந்த புகார் செய்தி பற்றி மற்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களது கருத்துகளை இதே பக்கத்தில் வெளியடவேண்டும்.

  அப்போதுதான் இந்த புகார் பற்றிய முழு தகவல்களும் அனைவர்க்கும் தெரியவரும்.

  நான் இதை சொல்ல காரணம் திரு இடி மின்னல் ஹாஜா அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் வைத்து திரு மனோகரன் அவர்களை அவதூறாக பேசியது மட்டுமன்றி கொலை மிரட்டல் விடுத்ததை எதிரே இருந்த தேநீர் (TEA) கடையில் இருந்து பார்த்த பல நபர்களில் நானும் ஒருவன்.  ReplyDelete
 2. mangatha akka maganOctober 11, 2012 at 8:00 PM

  வார்டுக்கு ந‌ல்லா வேலை செஞ்சார் இந்த மெம்ப‌ர் ஆனா என்ன‌ இந்தாளுக்கு எட‌ம் பொருள் ஏவ‌ல் தெரியாது. இந்த‌ அரெஸ்டுக்கு பின்னால் பெரிய‌ ச‌தி உள்ள‌து.முக்கியமான‌ ஆள்க‌ள் இத‌ன் பேக் ர‌வுண்டில் உள்ள‌ன‌ர்.பாவ‌ம் இந்த‌ மெம்ப‌ர் ந‌ம்ப‌ வைத்து க‌ழுத்த‌றுத்து விட்ட‌ன‌ர்.க‌வ‌ன‌ம் அடுத்த‌ குறி தொப்பி போட்ட‌ மெம்ப‌ர்தான் எல்லாம் க‌மிஷ‌னுக்காக‌ ந‌ட‌க்கும் கூத்து.ப‌ண‌ம் என்றால் பிண‌மும் வாயை பிள‌க்கும்னு சும்மாவா சொன்னாங்க‌.யாரும் எத‌ ப‌த்தியும் வாய‌ தொர‌க்காதீங்க‌ தொற‌ந்த‌ இதான் க‌தி .க‌த்தி இரண்டும் ப‌க்க‌மும் கூர்மையான‌து நாளைக்கு இதே நெல‌மை போலீசை ஏவிய‌வ‌ர்க‌ளுக்கு வ‌ரும் ஞாப‌க‌ம் இருக்க‌ட்டும்.

  ReplyDelete
 3. mangatha akka maganOctober 11, 2012 at 8:56 PM


  தேநீர் க‌டையில் இருந்து பார்த்தேன் என்று அனாம‌த்தாக‌ ஒருத்த‌ர் போட்ரிருக்காரே அப்ப‌டி உண்மையாயிருந்தா பேர‌ சொல்ல‌ வேண்டிய‌து தானே என்ன‌ ப‌ய‌ம் அப்டியே மெம்ப‌ர் ஹாஜா பேசியிருந்தாலும் ஊர் உல‌க‌த்தில் ந‌ட‌க்க‌தாதா இதுக்கு தூக்கி உள்ள‌ வைப்பாங்காளா ப‌ஞ்சாய‌த்து போர்ட‌ல‌ எத்த‌ன‌ ச‌ண்டை இது மாதிரி ந‌ட‌ந்திருக்கு அதுனாலே இதுல்லாம் கார‌ண‌ம் இல்லை இதுக்கு பின்னாடி பெருசா பிளான் இருக்கு அதிகார‌த்தில் இருக்கிறோம் என்று ஆடாதீர்க‌ள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்க‌ள் எளிவ‌ர்க‌ளின் பாவ‌ம் சும்மா விடாது

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.