Monday, October 1, 2012

ராமநாதபுரம் ‍கீழக்கரை புதிய பஸ் சேவை!தொட‌ங்கி வைத்த‌ ப‌ஸ்சில் அமைச்ச‌ர் ப‌ய‌ண‌ம் செய்தார்!

ராமநாதபுரம் ‍கீழக்கரை புதிய பஸ் சேவை!தொட‌ங்கி வைத்த‌ ப‌ஸ்சில் அமைச்ச‌ர் ப‌ய‌ண‌ம் செய்தார்!
ராமநாதபுரம்&கீழக்கரை இடையே புதிய அரசு பஸ் சேவையை அமைச்சர் சுந்தர்ராஜ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரத்திலிருந்து புத்தரேந்தல், களரி, மேலமடை, கொம்பூதி, வேளானு�ர், நத்தம் குளபதம், கும்பிடுமதுரை வழியாக கீழக்கரைக்கு 11ஏ என்ற புதிய அரசு பஸ் சேவையை ஜவுளித்துறை அமைச்சர் சுந்தரராஜ் தொடங்கிவைத்து அதே பஸ்சில் பயணம் செய்தார்.


உடன் ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் ஆலங்குளம் குரு, மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி பாக்கியநாதன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வக்குமார், கீழக்கரை நகர் அதிமுக செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சரவணா பாலாஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.

ராமநாதபுரத்திலிருந்து நத்தம் குளபதம் வரை 11 என்ற எண் பஸ் இயங்கி கொண்டிருந்தது. இந்த பஸ்சை கீழக்கரைவரை இயக்க வேண்டுமென நத்தம் குளபதம் பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

 அமைச்சர் சுந்தரராஜிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பஸ் சேவையை துவக்கி வைத்து பழைய பஸ்சை கீழக்கரை வரை இயக்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

ப‌ஸ்சில் ப‌ய‌ண‌ம் செய்து வ‌ந்த‌ அமைச்ச‌ரை அப்ப‌க்குதி ம‌க்க‌ள் வ‌ர‌வேற்று பொன்னாடை போர்த்தினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.