Friday, October 5, 2012

எடை குறைவு புகார்!கீழ‌க்க‌ரையில் க‌டைக‌ளில் எலக்ட்ரானிக் த‌ராசுக‌ளை ப‌ய‌ன்படுத்த‌ கோரிக்கை!


கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி அருகே பழைய மீன் மார்க்கெட்டும், புதிய பஸ் ஸ்டாண்டு பின்புறம் புதிய மீன் மார்க்கெட்டும் உள்ளது. மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் அரசு விதிகளின்படி எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் அதை கடைபிடிப்பதில்லை என‌வும் மாறாக முத்திரையில்லாத தராசு மற்றும் எடைகற்களை பயன்படுத்துவ‌தாக‌வும். இதிலும் ஒருசிலர் எடை கற்களுக்கு பதில் கருங்கற்களை பயன்படுத்துகின்றனர் என‌ புகார் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மார்க்கெட்டில் ஒரு சில‌ க‌டைக‌ளில் ஒரு கிலோ மீன்வாங்கி சென்று வீட்டில் எடைபோட்டால் 800 கிராம் தான் உள்ளது. ஒரு கிலோ வுக்கு 200 கிராம் முதல் 250 கிராம் வரை எடை குறைவ தாக குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிறாது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக ந‌க‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீது கான் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,       ‘கீழக்கரையில் உள்ள மீன்மார்க்கெட்டில் உள்ள மீன் மற்றும் காய்கறி கடைகளில் அரசு முத்திரையில்லாத தராசு மற்றும் எடைகற்களை பயன் படுத்துவதால் எடைகுறைவு ஏற்படுகிறது. மீன் வரத்து அதிகம் இருந்தாலும் மீன் விலை மட்டும் குறைவதில்லை. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


இதுகுறித்து கீழக்கரை ஒருங்கிணைந்த சிறுதொழில் மீனவர் சங்க துணைச் செயலாளர் அக்பர் அலி கூறுகையில், ‘காற்று அதிகமாக வீசுவதால் மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதனால் மீன்களின் விலை சற்று கூடுதலாக உள்ளது. மேலும் எடை குறைவு இருந்தால் எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார்.

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 5, 2012 at 6:53 PM

    இன்று ஜும்மாவுக்கு பழைய குத்பா பள்ளிக்கு செல்லும் போது மனம் கொள்ளா சந்தோஷம்.. காரண்ம் ஐந்து வாசல் கிட்டங்கி வழியாக கடற்கரை செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டு மைக்ரோ பூங்காவும் அமைக்கப்பட்டு கண் கொள்ளா காடசியாக மாறியது தான்..

    இனி மேலாவது பொது மக்களும் அங்கு குப்பைகளை போடாது நகராட்சியின் சுகாதார நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.. அதையும் மீறி சில கேடு கெட்ட ஜன்மங்கள் அசுத்தப்படுத்தினால் நகராட்சி துப்பரவு பணியாளர்கள் உடனுக்கு உடன் குப்பைகளை அகற்றி இன்று போல என்றும் மிளிர நடவடிக்கையில் ஈடு பட வேண்டும்..

    நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த அப்ப்குதி ஒன்பதாவது வார்டு மக்கள் பிரதிநிதியும் , நகராட்சியின் துணை தலைவருமான சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள். இது போல உங்கள் சேவை மேன்மேலும் தொடர நல் வாழ்த்துகள்..

    இது சம்பந்தமாக கீழக்கரை டைம்ஸில் எமது பதிவு:

    29 August 2012 சீரழிந்து போன நகர் சுகாதாரத்தை சீர் செய்ய ஆணையர் அவர்களும், நகராட்சி தலைவியும் எடுத்து வரும் முயற்சிகளை மனதார பாராட்ட கடமைப் பட்டுள்ளோம் பணிகள் தொய்வு இல்லாமல் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுகிறோம்.

    மின்ஹாஜியார் பள்ளி முகப்பில் உள்ள சுகாதார சீர்கேட்டை சீர் செய்ய விரைந்து செயல்படுவதுடன் அருகில் உள்ள ஜும்மா நடைபெறும் பழைய குத்பா பள்ளி முகப்பிலும் கற்கள் மற்றும் கூழங்களை நீக்கி அந்த சாலையையும் காலதாமத்தை தவிர்த்து செப்பனிட அன்புடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 5, 2012 at 7:09 PM

    நகர் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ஹமீது கான் அவர்களின் மீன் விலை ஆதங்கத்தில் உணர்வு பூர்வமாக பங்கு கொள்கிறோம்.இருப்பினும்......

    அதே நேரத்தில் தற்சமயம் கச்சா எண்ணெய் விலை குறைந்தும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க முயற்சி நடப்பதாக தெரிய வில்லையே!மத்தியில் நடப்பது மைய அரசா? மையமான அரசா?? விலைவாசி ஏற்றத்தால் சித்த பிரமையில் இருக்கும் எம்மை யாராவது தெளிய வையுங்களேன், பிளீஸ்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.