கீழக்கரை புது கிழக்குத்தெரு பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
புது கிழக்குத்தெருவில் திட்டத்தில் வாய்க்கால் கட்டுவதற்கு ஜே.சி.பி. மூலம் கடந்த பத்து நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளம் தோண்டினால் அதில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும். இதன் மூலம் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது எனவே
இங்கு வாய்க்கால் கட்டி மர்ம காய்ச்சலை தொடங்கி வைக்க வேண்டாம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வழியே தாறுமாறாக சாலையில் வந்த அரசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விஜயன்(57) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். ஓட்டுநர் விஜயன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியை சேர்ந்த அசாருதீன் என்பவர் கூறியதாவது,
ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியான இங்கு இறைவன் அருளால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.அரசு துறையினரே இது போன்று குடிபோதையில் பணியில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கதக்கது.ஓட்டுநரை போலீசில் ஒப்படைத்துள்ளோம்.இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ena kodumai sir idu?////???????
ReplyDeleteகருத்துகளை பதிவு செய்ய எரிச்சலாக இருக்கிறது.. பணி நேரத்தில் குடி போதையில் அதிலும் வாகனத்தை ஓட்டுகிறான் என்றால் என்ன வென்று சொல்லுவது??இவனிடம் நேர்மையான கடமையை எப்படி எதிர்பாரக்க முடியும்?? மக்கள் வரிப்பணம் வீண்..
ReplyDeleteநல்ல காலம் சகோதரர் அசாருதீன் கூறியது போல அசம்பாவிதம் எதுவும் நடை பெறவில்லை.. ஒருகால் அப்படியே நடந்திருந்தால் நம்மால் என்ன செய்து விட முடியும்?? இழப்பை மற்றும் ஏற்றுக் கொள்ள வேண்டுயது தான்.. காரணம் இந்தியாவை கொள்ளை அடித்த, ஆதிக்க வெறியர்கள் பிரிட்டீஸ்காரர்கள் வகுத்து வைத்து விட்டு போன பாழாய் போன அதிகப்படியான குற்றவியல் சட்ட திட்டங்களை இன்றும் நாம் கட்டி மாரடிப்பதின் வினை தான்..
சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மால் காலத்திற்கு ஏற்ற சட்டங்களை நம்மால் முடியவில்லை..
எப்படி முடியம் ஊழல், லஞ்ச லாவண்ணியம் மலிந்த நாட்டில்??வெகு சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி லஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.. சுரங்க ஊழலில் ரெட்டி சகோதரர்களை ஜாமினில் விட லஞ்சம் வாங்கிய நீதிபதிகள் கைது.. இந்தியாவின் பிரபல வக்கீல் ராம் ஜெத்மாலனி, இன்றைய நீதிபதிகளில் அனேகர் கரை படிந்த கை களுக்கு சொந்தக் காரர்கள் என பகிரங்கமாக சில காலத்திற்கு முன் அறிவித்தார்..
ஊரறிய நடக்கும் துர் மரணங்களுக்கும், இரு சக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு பிரேத பரிசோதனை முறையும், பெரிய பட்டண கடல் விபத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை போன்ற அனைத்திற்கும் இந்த பாழாய் போன சட்டங்கள்தான் காரணம்..
இந்தியன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா.
தவறுக்கு வருந்துகிறோம்.. இராமநாதபுரம் மாவட்டம் தலைமை நீதிபதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..
ReplyDelete