Friday, October 5, 2012

கீழ‌க்க‌ரை வ‌ழியாக‌ புதிய‌ ர‌யில்பாதை! ப‌ல்லாண்டு க‌ன‌வு திட்ட‌ம் நிறைவேற்ற‌ தீர்மான‌ம்!


கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் சார்பில் காரைக்குடி, கீழக்கரை, கன்னியாகுமரி அகலரயில்பாதை திட்டத்தை உடனே நிறை வேற்ற வேண்டும் என தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ளது

காரைக்குடி-கன்னியாகுமரி புதிய வழித்தடத்தில் கீழக்கரை
வழியாக அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி நிறைவடைந்தும் பணி துவங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதால் இப்ப‌குதி ம‌க்க‌ள் பெரும் அதிருப்திய‌டைந்துள்ள‌ன‌ர்.

இயற்கை வளம் நிறைந்த  ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில்   ப‌ல‌ ஊர்க‌ளில் ரயில் போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் தொழில்வ‌ள‌ம்,சுற்றுலா வ‌ள‌ர்ச்சி பெருகுவ‌த‌ற்கு பெரும் த‌டையாக‌ உள்ள‌து.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், வியாபார தொடர்பை ஏற்படுத்தவும் காரைக்குடியிலிருந்து தொண்டி, தேவிபட்டினம் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக க‌ன்னியாகும‌ரி வரை புதிய ரயில் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து துவங்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்து மாதங்கள் பல ஆகியும் பணிகள் துவங்குவதற்கான அறிகுறிகள் காணவில்லை.கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டு ரயில்வே துறைக்கு கடிதம் எழுதினார்.
இத‌ற்கு தென்னக ரயில்வே மக்கள் தகவல் அலுவலர் (கட்டுமானபிரிவு) அனுப்பிய தபாலில், "காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம்,கீழக்கரை, மீலவிட்டான், ஆறுமுகனேரி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் முடிந்து விட்டதாகவும்,இதற்கான ஆய்வு அறிக்கைகளை ரயில்வே போர்டிடம் ஒப்படைக்க இருப்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்திட்ட‌தை செய‌ல்ப‌டுத்த‌ 1,959 கோடி ரூபாயில் திட்ட‌ ம‌திப்பீடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.

 ஆண்டு க‌ட‌ந்தும் திட்டம் சம்பந்தமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.நிதியும் ஒதுக்க‌ப்ப‌ட‌வில்லை பணி துவங்குவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சுற்றுலா பயணிகளும்,வியாபாரிகளும்,இப்ப‌குதி ம‌க்க‌ளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது குறித்து சுல்தான் அப்துல் காத‌ர் என்ப‌வ‌ர் கூறுகையில் ,

இப்ப‌குதி எம்பி ரித்தீஸ் இது ப‌ற்றி எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் மேற்கொள்ள‌வில்லை,இப்ப‌டி ஒரு திட்ட‌ம் இருப்ப‌து இவ‌ருக்கு தெரியுமா என‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌டுகிற‌து.தென் மாவ‌ட்ட‌ எம்பிக்க‌ள் அனைவ‌ரும் நிதிய‌மைச்ச‌ரை ச‌ந்தித்து இத்திட்ட‌திற்கான‌ நிதியை ஒதுக்குவ‌த‌ற்கு கோரிக்கை வைக்க‌ வேண்டும் மேலும் புதிய‌ திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப‌ட‌ இருக்கும் அனைத்து ஊர்க‌ளில் உள்ள‌ அமைப்புக‌ள்,வ‌ணிக‌ ச‌ங்க‌ங்க‌ள் அனைத்தும் இணைந்து போராட்ட‌ங்க‌ளை அறிவிக்க‌ வேண்டும்.அந்த‌ந்த‌ ஊர் உள்ளாட்சி அமைப்புக‌ளின் சார்பில் புதிய‌ ர‌யில் பாதை திட்ட‌த்தை நிறைவேற்ற‌ கோரி தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.ஓட்டுக்க‌ளுக்காக‌ ம‌ட்டும் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ளும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் புதிய‌ ர‌யில் பாதை விஷ‌ய‌த்தில் மெத்த‌ன‌மாக‌ இருப்ப‌து மிக‌வும் வேத‌னையான‌ விசய‌மாகும் என்றார்
காரைக் குடி, கீழக்கரை, கன்னியாகுமரி புதிய‌  அகலரயில்பாதை திட்டத்தை உடனே நிறை வேற்ற வேண்டும் என கீழ க்கரை சமூகநல நுகர் வோர் சேவை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத் தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் அமானுல்லா தலைமையில் நடந்தது. அவை முன்னவர் செய்யது இபுராகிம் மற்றும் இயக்கத்தின் நிர்வாகிகள் முன்னி லை வகித்தனர். செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:

ஈ.சி.ஆர். சாலையில் கீழக்கரை ராமநாதபுரம் இணைப்பு சாலையில் கட்டபப்பட்டுள்ள ரயில்வே மேம்பால ரோட்டை உடனடியாக திறக்க வேண்டும். காரைக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி அகல ரயில் பாதை திட்டத்தை வரும் பட்ஜட்டில் சேர்த்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட‌ ப‌ல‌ தீர்மாண‌ங்கள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.
 

1 comment:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 6, 2012 at 1:49 PM

  கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தினருக்கு எமது அன்பான கோரிக்கை..

  நகரின் நலனுக்காக பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டும், அதற்காக மத்திய, மாநில அரசுகளுடன் போராடி வரும் நீங்கள்,பஸ் பயனாளிகளின் மேலான நன்மைக்காக குறிப்பாக கல்லூரி மாணவச் செல்வங்களுக்காக அதிலும் குறிப்பாக மாணவ வனிதையருக்காக மற்றும் மூத்த குடி மக்களுக்காகவும் கீழக்கரை-ஏர்வாடி முச்சந்தியில் நிழற் குடைகள் அமைக்க முயற்சிக்க வேண்டுகிறோம்..

  கீழக்கரை ரோட்டரி சங்கமும் இதற்கு முழு ஆதரவு தந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்..

  (கடும் கோடை காலத்தை விட இப்போது மிகவும் கடுமையான சீதோஷ்ணம் நிலவுகிறது என்பதையும் மனதில் கொள்ளவும்)..
  முன் பதிவு:
  mankathavinthangachimakan14 August 2012 7:16 PM
  அப்போ காரைக்குடி-தூத்துகுடி அகலப் பாதை நிச்சயமாக வரப் போவதில்லை, அப்படித்தானே.

  யார் அந்த ரித்தீஷ்?

  கோடையிலும், மழையிலும் ஆண்டாண்டு காலமாக ஏர்வாடி முச்சந்தி சாலையில் மக்களும், கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்கள் படும் அவதி அவருக்கும், ஊரில் உள்ள அவரின் துதிபாடிகளின் கண்ணுக்கு, காதுக்கு படவில்லையே!!! வருடா வருடம் மக்கள் வரிப் பணத்திலிருந்து வழங்கபடும் கோடிக்கணக்கான தொகுதி நிதி என்னவாயிற்று? ராமநாதபுரம் தொகுதியிலேயே கீழக்கரை பிரதான ஊர் ஆயிற்றே.

  இதனால் வேதனைப்படும் வேளையில் எந்தன் பணிவான தாழ்மையான வேண்டுகோள்: மதிப்பும், மரியாதைக்குரிய சீதக்காதி டிரஸ்ட், சதக்கு டிரஸ்ட் இருவரும் இணைந்து நிறுவனத்திற்கு ஒன்றாக ஏர்வாடி முச்சந்தியில் கீழக்கரை-இராமநாதபரம் பஸ் போகும் நிறுத்ததிலும், கீழக்கரை-ஏர்வாடி பஸ் போகும் நிறுத்ததிலும் தற்சமயம் கோவை, மதுரையில் ஏன் இரமநாதபுரம் அரண்மனை முன்பாக உள்ளது போல நிழற் கூரைகளை அமைத்து கொடுத்தீர்களானால் பயன் அடையும் மக்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் வாயார நிச்சயமாக வாழ்த்துவார்கள்.அது உங்கள் தலைமுறைகளை நிச்சயம் தலை காக்கும்.

  அல்லது ஜீ தமிழ் தொலைகாடசி ஒளிபரப்பில் ம்திப்புக்குரிய் சகோதரி டாகடர். ரஹ்மத்துனிஸா பி.எஸ்.எ.ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்டு காட்டியதை போல் அரசு செய்ய வேண்டியதை செய்யத் தவறுவதால் ஊர் மக்கள்தான் துண்டு ஏந்தி வசூல் செய்து, வசதிகளை செய்துகொள்ள வேண்டுமோ? அதுதானே கீழக்கரையின் தலையெழுத்து!!!

  பாவம். மனித நேயர், மத நலலிணக்க நேசர், சமூக ஆர்வலர் நண்பர் தங்கம் இராதகிருஷ்ணன் தன் வாழ் நாளில் காரைக்குடி-தூத்துக்குடி அகலப் பாதையை காண துடித்து கொண்டு இருக்கிறார்.அதற்காக சம்பந்த்ப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார். அவருக்காகவது அகலப்பாதை அமைய பிரார்த்திப்போமா

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.