Thursday, October 4, 2012

மாற்றுத்திறனாளிகளுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பு!கீழ‌க்க‌ரை க‌ல்லூரி க‌ருத்த‌ர‌ங்க‌த்தில் முத‌ல்வ‌ர் பேச்சு!


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தங்கச்சிமடம் ஃபீடு அறக்கட்டளை, கோவை யூடிஸ் அறக்கட்டளை சார்பாக மாற்றுதிறன் மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன் னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர் ஆனந்த் வரவேற்றார்.

தங்கச்சிமடம் ஃபீடு அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஆல்ட்ரின், கோவை யூடிஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப் பாளர் சேகரன், மேலாளர் மணிகண்டன், நிர்வாக இயக்குநர் கிருபா, ஈரோடு விவேகம் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெற்றோர் சங்க அமைப்பாளர் கஸ்து�ரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி பேசுகையில், “மாற்று திறனாளிகள் உளவியல் ரீதி யாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே மாணவ, மாணவி கள் மாற்றுதிறனாளிகளிடம் உடலாலும், மனதா லும், அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் பழகி அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும்,” என்றார். யூடிஸ் அறக்கட்டளை மற்றும் ஃபீடு அமைப்பு இணைந்து நடத்தும் மாற்று திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சிகளான பாய் நெய் தல், கால் மிதியடி செய்தல், அலங்கார பொருள் தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடையவும் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லு�ரிகளி லிருந்தும் மாற்று திறனாளிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துறைத்தலை வர் நாசர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கணிதவியல் துறைத்தலைவர் சேக் அப்துல்லா உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லு�ரி நாட்டு நலப்பணித்திட்டம், தங்கச்சிமடம் ஃபீடு அறக்கட்டளை, கோவை யூடிஸ் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மாற்றுதிறன் மேலாண்மை கருத்தரங்கத்தில் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி பேசினார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.