கீழக்கரை நகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் ஹாஜா நஜிமுதீன்(திமுக) தன்னுடைய வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை மேற்பார்வையாளர் மனோகரனிடம் அகற்ற சொன்ன போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் அளித்த புகாரின் படி கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கவுன்சிலர் ஹாஜாவை பொய்வழக்கு போட்டு கைது செய்து செய்ததை கண்டித்தும் இதற்கு காரணமாக இருந்த மேற்பார்வையாளர் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கவும், வடக்குதெரு 20வது வார்டு பகுதியை சேர்ந்தவர்களும்,திமுகவினரும் 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து நகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.
திமுக நகர் செயலாளர் பசீர் தலைமையில் திமுக நிர்வாகிகள் சுல்தான் செய்யது இப்ராகிம்(ராஜா),ஜமால் பாரூக்,கென்னடி மற்றும் நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் மற்றும் வடக்குதெரு ஜமாத் நிர்வாகிகள்,தம்பி வாப்பா என்ற முகைதீன் இப்ராகிம்,ரத்தினமுகம்மது,ஜாஹிர் ஹுசைன்,சமது உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இது குறித்து வடக்குத்தெரு 20வது வார்டு பகுதியை சேர்ந்த திமுக நகர் செயலாளர் பசீர் அகமது கூறியதாவது,
திமுக கவுன்சிலர் ஹாஜா முகைதீன் கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல்களை அவ்வப்போது வெளியிட்டும் ,பிட் நோட்டீஸ் அடித்தும் வெளியிட்டார்.மேலும் ஊழலை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார்.கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் வரை கவுன்சிலர்கள் நடைபயணம் மேற்கொள்ள காரணியாக இருந்தார்.ஊழக்கு எதிராக தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டிருந்ததால் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர்.
கவுன்சிலர் ஹாஜா முகைதீன் தனது வார்டு பகுதியில் குப்பையை அகற்ற சொன்னது தவறா ?
நகராட்சி மேற்பார்வையாளர் மனோகரன்தான் துப்புரவு செய்ய சொன்ன கவுன்சிலர் ஹாஜா முகைதீனை ஆபாசமாக வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.நகராட்சி நிர்வாகம் ஏன் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,அவர் மீது பொய் வழக்கு போட உதவிய அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.மேலும் இது போன்ற பழிவாங்கும் போக்கு தொடர்ந்தால் உண்ணாவிரதம் ,ஆர்பாட்டம் போன்ற போராட்டங்கள் பொதுமக்களை திரட்டி நடத்தப்படும் .
இந்த கைது தவறான முன்னுதாரணம் கவுன்சிலருக்கே இந்த நிலைமை என்றால் நாளை நகராட்சிக்கு அன்றாடம் சொந்த பணிகள் தொடர்பாக வரும் பொது மக்கள் தங்கள் பணிகள் தாமதாமாகும் போது கேள்வி கேட்டால் பொதுமக்கள் மீது இது போன்ற புகார்களை நகராட்சி நிர்வாகம் செய்யக்கூடும்.எனவே இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இது போன்ற கைது மிரட்டல்களை அனுமதிக்க கூடாது என்றார்.
மக்கள் நலத் திட்டங்கள் சரித்திரத்தில் பதிவாகிறதோ இல்லையோ இவர்களின் அக்கப்போர் சரிதிரத்திலும் மக்கள் மனதிலும் நிச்சயம் பதிவாகும்..
ReplyDeleteஊழலில் கடசி பாகுபாடு காணாத இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பரச்சனைக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்..
கின்னஸ் பத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டியவரகள். அந்தோ பரிதாபம் கீழக்கரையில் தத்தளிக்கிறார்கள்..
வாழக வளமுடன்