அதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வீதிவீதியாக ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
அதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வீதிவீதியாக ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ,பால்விலை உயர்வு,பஸ் கட்டணம் உயர்வு, மின்கட்டணம் உயர்வு அரிசி பருப்பு சீனி போன்ற அத்தியவசிய பொருள்களின் உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் இதை கண்டித்தும் மேலும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டிப்பதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டு தமிழகம் முழுவது திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் கீழக்கரையில் நகர் திமுக சார்பில் கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் துணை செயலாளர்கள் நயினார்,ஜமால் பாரூக்,முன்னாள் இளைஞர் அணி நகர் செயலாளர் சுல்தான் செய்யது இப்ராகிம் ராஜா, முன்னிலையில் நிர்வாகிகள் அமீர்,சித்தீக்,சுகைபு ,கென்னடி,வாஹிது,மரைக்கா,திமுக கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா,அரூசியா, சாகுல்ல் ஹமீது மற்றும் இளைஞர் அணி பயாஸ்,சந்துரு,தவ்பீக்,பாலிஹ்,சாகுல் ஹமீது என்ற பாம்பே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் அதிமுக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பட்டன.ஏராளமான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.