18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை நகராட்சி சார்பில் தெருவிளக்கு அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டெண்டரை எடுத்தது.ஆனால் அரசின் விதிமுறைகளை மீறி தரம் குறைந்த விளக்குகளையும்,மின்சாதனங்களையும் கீழக்கரை நகரில் அமைப்பதற்கு முயற்சித்தது.இதை நடுநிலையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து பொருட்களையும் அந்நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் மீண்டும் தரமான பொருட்களை விநியோகம் செய்யும் என காத்திருந்தோம் ஆனால் மறுபடியும் அந்த தனியார் நிறுவனம் தரமில்லா டீயுப் லைட் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை கீழக்கரையில் பொருத்த இருப்பதாக அறிகின்றோம்.இந்த மின்சாதன பொருட்கள் அனைத்து நகராட்சி அலுவலகத்தில் வைக்காமல் தனியார் பள்ளி வளாகத்தில் வைத்திருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.
ஒப்பந்த விதிமுறைப்படி அரசின் அனுமதித்துள்ள முன்னணி நிறுவனங்களின் தரமான மின்சாதன பொருட்களைதான் பொருத்த வேண்டும் அப்போதுதான் அடிக்கடி பழுது ஏற்படாது அரசு நிதியும் விணடிக்கப்படாது.எனவே மின் சாதனங்களை பொருத்துவதற்கு முன் அவற்றை ஆய்வு செய்து தரமானவையாக இருந்தால் மட்டுமே பொருத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி தரமற்ற மின்சாதன பொருட்களை கீழக்கரை நகரில் பொருத்த நகராட்சி நிர்வாகம் அனுமதிக்குமானால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வேன் . இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பான முந்தைய செய்தி http://keelakaraitimes.blogspot.com/2012/06/blog-post_1228.html
இன்னும் இந்த பிரச்சனை தீர்ந்த பாடில்லை..தொடர் கதையாக உள்ளது.. இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி ஆட்டி படைக்கிற்து. ஒரு வேளை இதற்கும் மாநில மந்திரி வந்து நடவடில்கை எடுக்க வேண்டி இருக்குமோ? யாம் அறியோம் பராபரமே!
ReplyDeleteதிருந்தவே மாட்டர்களா?? என்னே ஒரு கேடு கெட்ட ஜென்மங்கள்.