Friday, October 26, 2012

உடைந்து விழும் நிலையில் மின்க‌ம்ப‌ம்!விப‌த்துக்கு முன் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை !

கீழக்கரையில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்ப த்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் உள்ள ஒருசில மின்கம்பங்கள் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இவைகளை உடனே மாற்றி தரவேண்டும் என்று பல முறை மின்வாரியத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில் லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கீழக்கரை ஜின்னா தெருவில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன.  இங்கு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு மின்கம்பம் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்தில் மனு கொடுத்ததும், ஊழியர்கள் வந்து மின்கம் பம் கிழே விழாமல் இருப்பதற்காக கம்பிகளால் கட்டிவைத்தனர். அந்த கம்பியும் தற்போது துரு பிடித்துவிட்டதால் மின்கம்பம் உடை ந்து விழும் நிலையில் உள் ளது. உடைந்து விழுந்து பல சேதங்கள் ஏற்படுத்தும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த கலீல் மற்றும் குமார் கூறுகையில், ‘ஒருவரு டத்திற்கும் மேலாக எங் கள் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்’ என்றனர்.

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 26, 2012 at 7:55 PM

    இனிய நண்பர்களே நீங்கள் இருப்பது அரசால் புறக்கணிக்கப்பட்ட பாவப்பட்ட கீழக்கரை மாநகரில் (?)

    மனு கொடுத்து விட்டால் மட்டும் நாங்கள் உடனே சீர் செய்து விடுவோமாக்கும்!! காவு வாங்கிய பிறகு தான் நாங்கள் செயல் படவே தொடக்குவோம்..

    அவசரப்பட்டால்.......

    மின் துறையா, கொக்கா ? கபர்தார்..

    பெரு தொகை வசூல் செய்து எங்களை அணுகுங்கள்.. அப்போது பார்ப்போம்..

    கொக்கு பற பற

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 26, 2012 at 8:08 PM

    அரசு எப்படியோ மக்களும் அப்படிதான் இருக்கிறார்கள்!! என்ன செய்வது ?? அருகில் உள்ள வீட்டின் சிலாப்பை காணுங்கள்.கம்பிகள் துருப்பிடித்து துரதிஷடவசமாக ஜன நடமாட்டம் உள்ள நேரத்தில் இடிந்து விழுமானால் அப்போது உயிர் சேதம் ஏற்படாதா? சிந்திக்க வேண்டுகிறேன்..குறையாகச் சொன்னதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..

    நடப்பவை அனைத்தும் நல்லவையாக நட்க்கட்டும். வல்ல ஏக நாயன் அனைவருக்கும் போதுமானவன்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.