கீழக்கரை நகராட்சியின் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்படும் உரக்கிடங்கை ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர்.
கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிஷனர் முகம்மது முகைதீன், பொறியாளர் அறிவழகன்,கவுன்சிலர்க செய்யது கருணை பாவா,அன்வர் அலி,சித்தீக்,ரபியுதீன்,அதிமுக மாவட்ட செயலாளர் ஆணிமுத்து,துணை செயலாளர் முனியசாமி,ஒன்றிய செயலாளர் முனியாண்டி,நகர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சரவண பாலாஜி ,பாபு,ஜகுபர் ஹுசைன்,நாரயாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.டாக்டர்கள் ராஜ்மோகன்,சாகுல் ஹமீது,ஜவாஹிர் ஹீசைன்,ஹசீன்,முத்தமிழ் அரசி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் கீழக்கரை நகராட்சி அலுவலகம் வருகை தந்த அமைச்சர் நகராட்சி நிர்வாகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கமிஷனர் முகம்மது முகைதீனிடம் கேட்டறிந்தார்.கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.பணிகளி ஏதேனும் குறையிருந்தால் சம்பந்தபட்ட ஒப்பந்ததாரரின் பில் பாஸ் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டார்.
கீழக்கரை நகராட்சிக்கு 2011-12ல், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதற்கான பணிகள் தரமில்லாமல் இருப்பதாக தன்னிடம் புகார் வருவதாக தெரிவித்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லாஹ் தவறேனும் நடைபெற்றிருந்தால் இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.